பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?

சசிகலா வரும் போது தினகரனை சிறையில் தள்ள திட்டம்!

பொருளாதாரம் வீழ்ச்சி:100 அடி உயரத்தில் மோடிக்கு சிலை…!

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

ஓரத்தில் வைக்கும் நினைவா-மறக்க முடியுமா…மறைக்க முடியுமா?

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

விஜய் தொலைக்காட்சியில் நூறு நாட்கள் ஒலிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆறரை கோடி பேர் பார்த்ததாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார், நிகழ்ச்சி நடந்த ஒவ்வொரு நாளும் ஆறரை கோடி பேர் பார்த்தார்களா அல்லது பிக் பாஸ் ஒளிபரப்பாகிய 100 நாட்களையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து ஆறரை கோடிபேர் பார்த்தார்களா என்றால், கமலோ விஜய் டிவியோ அதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், சில எபிசோடுகளில் ‘ஆறரை கோடி பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்ற பங்கேற்பாளர்களிடம் கூறியதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஆறரை கோடி பேர் பார்த்திருப்பதாக கமலின் வார்த்தையின் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன். அவர் அந்த எண்ணிக்கை மீண்டும் மீண்டும் சொல்ல காரணம். அந்த ஆறரை கோடி பேரையும் தான் தன் அரசியலுக்கான மூலதனமாகப் பார்க்கிறார் கமல். அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் முதலில்  ஆறரை கோடி பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தார்களா என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

இந்தியாவிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், செய்தி தொலைக்காட்சியையும் அதிக  நேரம் பார்க்கிறவர்கள் என்ற பெருமை தமிழக மக்களுக்கே உண்டு. சுமார் எட்டு மணி நேரம் வரை  தொலைக்காட்சிகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறவர்களும் உண்டு. என்பதால் அந்த பெருமை தமிழகத்திற்கு.

தமிழக கேபிள் ராஜ்ஜியம்

தமிழகத்தில் சுமங்கலி கேபிள் விஷன், ஜாக், டி.சி.சி.எல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி.  என பல நிறுவனங்கள் கேபிள் வழியே தொலைக்காட்சி சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதுபோக டி.டி.எச் சேவையை வழங்கும் ஏர்டெல் , விடியோகான், டாடா என ஏகப்பட்ட நிறுவனங்களும் கட்டணச் சேவை செய்கின்றன. இதற்கு முறையான டேட்டாக்களோ கணிப்புகளோ இல்லை.

தமிழகத்தின் மக்கள் தொகை ஏழரை கோடி. இதில் ஆறரை கோடி பேருக்கு தொலைக்காட்சி இருக்குமா என்பதும் அவர்கள் கேபிள் மூலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறி. இன்னும் மின்சாரம் எட்டிப்பார்க்காத நூற்றுக்கணக்கான கிராமங்கள் தமிழகத்தில் கூட உள்ள நிலையில் தொலைக்காட்சியை கற்பனை செய்ய முடியாதவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங்கில் எப்போதும் சன் தொலைக்காட்சி முதலிடத்திலும், கே  டிவி இரண்டாவது இடத்திலும், சன் மியூசிக் மூன்றாவது இடத்திலும். ஜீ தமிழ் நான்காம் இடத்திலும் அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியும் இருந்து வந்தது. நீண்ட காலமாகவே சன்  தொலைக்காட்சி முதலிடத்தில் இருந்தது பல சானல்களில் கண்ணை உறுத்த சன் டிவி கோல்மால் வேலை செய்கிறது என்றும். அவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறி   ரேட்டிங்கை கணிக்க இந்திய அளவில் பார்க் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். BARC (Broadcast Audience Research Council)  இந்திய அளவில் இந்த அமைப்பின்  புள்ளிவிபரங்களில் கூட தமிழகத்தைப் பொறுத்தவரை சன் தொலைக்காட்சியே முதலிடத்தில் இன்றும் இருக்கிறது.

பார்க்கின் இறுதியான அளவிடுதல் படி சன் தொலைக்காட்சி 954985 என்ற  புள்ளிகளோடு முதலிடத்திலும், 494528 என்ற புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கே.டி.வி 358321 புள்ளிகளுடனும் அதன் பின்னர் ஜீ தமிழ் 284176  என்ற புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்திருந்தால் விஜய் தொலைக்காட்சி முதலிடத்திற்கு அல்லவா வந்திருக்க வேண்டும். ஆனால் நான்காம்  இடத்திற்கு முன்னேற போட்டி போட்டுக் கொண்டிருந்த விஜய் தொலைக்காட்சி இப்போது இரண்டம் இடத்திற்கு பிக்பாஸ் மூலம் முன்னேறியிருக்கிறது என்பதுதான் உண்மை.எனவே தமிழ் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடித்திருப்பது சன் டிவி நிறுவனம்தான். கடந்த வாரம் 935283 இருந்த சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங், இந்த 954985 என உயர்ந்துள்ளது.எனினும் சன் டிவியை விட விஜய் டிவியின் வளர்ச்சியை பார்க்கையில், விஜய் டிவியின் டிஆர்பி குறைவு. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆறரை கோடி பேர்  பார்த்ததாக  கமல் சொன்னது பொய்.

அப்படி என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியை எவளவு பேர் பார்த்திருப்பாகள் என்ற உண்மையை கண்டடையவது கடினம். சுமார் 55 லட்சத்தில் இருந்து 60 லட்சம் பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருக்கக் கூடும். 100 நாட்களும் சேர்த்து மொத்தமாக ஆறரை கோடி பேர் பார்த்தார்கள் என்றால் கூட அது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும். கமல் எப்படி ஒரு கனவுலகில் வாழ்கிறார் என்பதோடு அந்த கனவுகை நோக்கி தொலைக்காட்சி பார்வையாளர்களில் ஒரு பிரிவினரையும் அழைக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்டவே இந்த செய்தி..

இது தொடர்பாக இன்னொரு முக்கியமான செய்தி இருக்கிறது  அதை இன்று இரவு வெளியிடுகிறோம்…!

முக்கிய செய்திகள்

ஏன் மாற்றப்பட்டார் வித்யாசாகர் ராவ்?

வேலை வாய்ப்பு : லண்டனின் பியர் டேஸ்ட் பண்ண ஆள் தேவை !

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO

’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!

’ஜெ’ நைட்டியில் டிவி பார்த்த விடியோ உள்ளது:தினகரன்

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*