லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு 50 பேர் பலி: சுட்டவர் பற்றி புதிய தகவல்கள்..!

பிக் பாஸை விட அதிகம் பார்த்த நிகழ்ச்சி எது தெரியுமா?

பிக்பாஸுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்-இபிஎஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

ஓரத்தில் வைக்கும் நினைவா-மறக்க முடியுமா…மறைக்க முடியுமா?

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியைக் காண திரண்டிருந்த ரசிகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 50 பேர் இதுவரை பலியாகி உள்ளார்கள். 200 பேர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளார்கள். அமெரிக்க வரலாற்றில் இதுவே மிக மோசமான துப்பாகிச் சூடு என்று ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

’காஸினோ’ களியாட்டங்களுக்கு பேர் போன லாஸ்வேகாஸ் நகரில் ‘மேண்டலே பே’ என்ற அடுக்குமாடி நட்சத்திர விடுதிக்கு அருகே இசை நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு 10-30 மணியளவில் மேண்டலே பே ஹோட்டலின் 32-வது மாடியில் இருந்து மர்ம நபர் சுட்டதில் முதலில் 22 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியானது. இப்பொது லாஸ்வேகாஸ் போலீஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் 50 பேர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் போலிசார் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.


துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபரான ஸ்டீபன் பேடாக் என்கிற 64 வயது நபரை போலீசார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவரோடு தங்கியிருந்த மரிலோ டேன்லோ என்ற பெண்ணை போலிசார் தேடி வருகிறார்கள். லாஸ்வேகாஸில் உள்ள ஓய்வுபெற்றோர் கம்யூனிட்டியில் உறுப்பினராக இருந்த ஸ்டீபன் நடத்திய இந்த கோர தாண்டவத்தின் பின்னால் உள்ள சதிகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

#Las_Vegas_shooting_atleast_50_dead #Las_Vegas_shooting # லாஸ்வேகாஸ்_துப்பாக்கிச்சூடு #அமெரிக்கா_துப்பாக்கிச்சூடு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*