சசிகலா வரும் போது தினகரனை சிறையில் தள்ள திட்டம்!

பிக் பாஸை விட அதிகம் பார்த்த நிகழ்ச்சி எது தெரியுமா?

பொருளாதாரம் வீழ்ச்சி:100 அடி உயரத்தில் மோடிக்கு சிலை…!

ஜெ’ மரணம்: விசாரணைக் கமிஷனுக்கு தடை கோரி வழக்கு..!

தாஜ்மகால் நீக்கம்:செங்கோட்டையை என்ன செய்வது?

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!
கணவர் நடராஜன் உடல்நலம் விசாரிக்க சசிகலா நாளை பரோலில் வரக்கூடும் என்பதால் அவர் வரும் போது அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரனை சிறையில் அடைக்க ஒபிஎஸ்-இபிஎஸ் திட்டம் வகுத்துள்ளனர்.
நீட் தேர்வு விவகராம் தொடர்பாக துண்டறிக்கை கொடுத்த வழக்கில் தினகரனையும் அவரது வலதுகரமாக செயல்படும் பெங்களூர் புகழேந்தியையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தினகரன் ஆதரவாளர்கள் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து துண்டறிக்கை கொடுத்தனர். அந்த துண்டறிக்கையில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான வாசகம் இருந்ததாகக் கூறி அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் சரவணன், சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரைப் பெற்ற அன்னதானப்பட்டி போலீசார் தினகரன், புகழேந்தி உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதில் உடனடியாக தினகரன் ஆதரவு சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.சி. வெங்கடாசலம், சூர்யா, சந்திரன், கலைவாணி ஆகியோரை கைது செய்தனர். நேற்று இரவு சித்த வைத்தியர் சசிகுமாரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தினகரன், புகழேந்தி உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூருவிலும், சென்னையிலும் முகாமிட்டுள்ளார்கள். வழக்கு பதியப்பட்டு கைதாகாமல் எஞ்சியிருக்கும் 31 பேர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை இன்று நாட இருக்கும் நிலையில் அதற்குள் அவர்களை கைது செய்ய தமிழக அரசு திவிரம் காட்டி வருகிறது.
அவர் மீது தேசத்துரோக வழக்கை பதிவது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சில மாதங்களேனும் சிறையில் வைத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களை தம் கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும் என நினைக்கிறார்கள் ஒபிஎஸ்- இபிஎஸ்.
சசிகலா பரோலில் வரும் போது அவரை வரவேற்க பிரமாண்டமான கூட்டத்தை தினகரன் கூட்ட திட்டமிட்டு வரும் நிலையில் சசிகலாவுக்கு அப்படி ஒரு ஊடக வெளிச்சம் வந்து விடக் கூடாது என்பது ஒபிஎஸ்- இபிஎஸ் குறியாக இருக்கிறார்கள். என்ன செய்தாவது அவரது வருகையை டம்மியாக்க வேண்டும் என்றால் தினகரனையும், புகழேந்தி, வெற்றிவேல் ஆகியோரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே ஒபிஎஸ்- இபிஎஸ் திட்டம். இன்று மாலைக்குள் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் நாளை தினகரன் தகுதி நீக்கம் தொடர்பாக தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வரும் போது தகுதி அதையும் பலவீனப்படுத்தவே இந்த கைது முயற்சி என்கிறது தகவலறிந்த வட்டாரம்.

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு 50 பேர் பலி: சுட்டவர் பற்றி புதிய தகவல்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?

கவுரி லங்கேஷ் கொலை: துப்பு கிடைத்துள்ளது…!

ஏன் மாற்றப்பட்டார் வித்யாசாகர் ராவ்?

வேலை வாய்ப்பு : லண்டனின் பியர் டேஸ்ட் பண்ண ஆள் தேவை !

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*