தமிழக அமைச்சர்களின் உளரல் முத்துக்கள் இவை…!

ஹஷ்ரத் பேகம் : மறைக்கப்பட்ட வீர வரலாறு…!

சசிகலாவை வெளியில் வர விடாமல் தடுக்கிறார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்? 

 

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது அமைச்சரவையில் இருந்த எவருமே பேசவில்லை. அம்மாவுக்கு முன்னால் குனிந்து நடப்பதும். காலில் விழுவதும் சொல்கிற வேலைகளைச் செய்வதுமே இவர்களின் அரசியல் வாழ்க்கையாக இருந்தது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நிலமை தலைகீழ் ஆளுக்கு ஆள் கண்ட மேனிக்கு பேசுகிறார்கள்.
சமீபத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை பொதுக்கூட்டத்தில் “அம்மா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்” என்று சொன்ன போது மொத்தமாக அதிர்ச்சியலை நம்மை தாக்கியது. இப்போது ஒவ்வொரு அமைச்சர்களும் ஆளுக்கொரு திசையில் கட்டுக்கடங்காமல் பேசித் திரிகிறார்கள்.
சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் உதிர்த்த உளரல் முத்துக்கள் இவை:-
#
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
“சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் ”
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
#
அமைச்சர் செல்லூர் ராஜூ
“மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைந்து விட்டது”
#
அமைச்சர் காமராஜ்
“ டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது”
#
அமைச்சர் கருப்பண்ணன்
“ மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரை”
#
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
“சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது”
#
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
“நான் திருப்பதியில் வேண்டியதால் தமிழகத்தில் மழைபெய்தது”
பைபோலா டிசாடர் என்ற குறைபாடு ஓவியாவுக்குப் பிறகு பலரையும் தாக்கியிருப்பதாக தெரிகிறது.

 

ஓவியாவோடு நடிக்க விரும்புகிறேன்: ஆரவ்

ஹஷ்ரத் பேகம் : மறைக்கப்பட்ட வீர வரலாறு…!

சசிகலாவை வெளியில் வர விடாமல் தடுக்கிறார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்? 

தமிழக அமைச்சர்களின் உளரல் முத்துக்கள் இவை…!

போயஸ் இல்லத்துக்கு ஆசைப்படும் தீபக்…!

நடராஜனைக் காப்பாற்ற ஏர் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட காத்திகேயன்…!

டான் ஸ்ரீதர் தனபால்’ தற்கொலை :பின்னணி என்ன?

நடராஜனைக் காப்பாற்ற ஏர் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட காத்திகேயன்…!

இது தமிழக அவலம்: இறந்த பெண்ணின் உடலை சுமந்து பெற்ற கணவரும் மகனும்!

தாய்மை எனும் பெருஞ்சுரண்டலிலிருந்து ஒரு விடுதலை!

சசிகலாவுக்கு பரோல் மறுப்பு…!

சசிகலா வரும் போது தினகரனை சிறையில் தள்ள திட்டம்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*