ஆளுநர் பதவியேற்பு:தேநீர் விருந்தை புறக்கணித்த ஸ்டாலின்…!

கேரளாவில் பிரமணரல்லாத 35 கோவில் குருக்கள் நியமனம்…!

’லைக்கா” நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை!
இளவரசி வீட்டில் தங்குகிறார் சசிகலா…!
ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவமரியாதையாக நடத்தப்பட்டதால் விழாவில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணித்து அரங்கை விட்டு வெளியேறினார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.2016 -ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்ற போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலிக்கு இருக்கை ஒதுக்கியதில் பாரபட்சம் காட்டியதாக எழுந்த விமர்சனங்களை அடுத்து அதற்காக வருத்தம் தெரிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
இந்நிலையில், தமிழகத்திற்கு புதிதாக வந்துள்ள ஆளுநர் பன்வாரிலால் பதவியேற்பு விழா இன்று சென்னை ராஜ்பவனில் நடந்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய ஆளுநருக்கு பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். அதிமுகவினரும், பாஜக பிரமுகர்களும் அதிக அளவில் கலந்து கொண்ட விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு இருந்ததால் அவரும் கலந்து கொண்டார்.
ஆனால், பதவியேற்பு விழாவுக்குப் பிறகு முதல்வர் மூத்த அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்த பின்னர் எதிர்க்கட்சி தலைவரை வாழ்த்து தெரிவிக்க அழைப்பது மரபு. ஆனால் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், பாஜக பிரமுகர்கள் என்று கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க அழைக்கப்பட ஸ்டாலின் சங்கடத்தில் நெளிந்தபடி இருந்தார்.
பின்னர் ஸ்டாலின் ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் தனது அதிருப்தியை தெரிவிக்க அவர் வருத்தம் தெரிவித்து விட்டு. ஸ்டாலினை அழைப்பதாக கூறினார். ஆனால் அதற்குள் ஸ்டாலின் மேடையில் ஏறி கவர்னருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துச் சொல்லி விட்டு தேநீர் விருந்தில் பங்கேற்காமல் வெளியேறினார்.
இன்றைய கவர்னர் பதவியேற்பு விழாவில் பாஜக தயவில் நடந்து கொண்டிருக்கும் அதிமுக அரசை வழி நடத்திச் செல்கிறவர்களை விட பாஜகவினரே சர்வ உரிமைகளோடு வலம் வந்தார்கள் என்கிறது தகவல்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*