இளவரசி வீட்டில் தங்குகிறார் சசிகலா…!

“என்னை நம்பி காங் இல்லை:காங்கிரசை நம்பி நானில்லை: -கோஷ்டி மோதலில் குஷ்பு…!

கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார் கருணாநிதி…!

ரட்டை இலை விசாரணை: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

ஹஷ்ரத் பேகம் : மறைக்கப்பட்ட வீர வரலாறு…!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா 5 நாள் பரோலில் சென்னை வருகிறார். அவர் சென்னை திநகரில் உள்ள இளவரசி வீட்டில் தங்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை பார்ப்பதற்காக 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. அவருக்கு 5 நாட்கள் மட்டும் பரோல் அளித்தது கர்நாடக சிறைத்துறை.
பரோல் கிடைத்த நிலையில் இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலவைச் சந்தித்து தினகரன் பேசினார்.இன்று மாலை பெங்களூருவில் இருந்து சென்னை வரும் விமானத்தில் அவருக்கு டிக்கெட் போடப்பட்டுள்ளது. விமானத்தில் வரும் அவருக்கு கர்நாடக காவல்துறை பாதுகாப்பு வழங்கும். மாலை 5 மணியளவில் சென்னைக்கு வரும் அவர் திநகரில் உள்ள இளவரசியின் மகள் இல்லத்தில் தங்குகிறார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க கட்சியினர் யாரும் செல்ல வேண்டாம் என்று தினகரன் உத்தரவிட்டுள்ள நிலையில். சிறையில் இருக்கும் இளவரசியின் மகள் வீட்டில் தங்க இருக்கும் சசிகலா இன்று மாலையே குளோபல் மருத்துவமனைக்குச் சென்று தன் கணவரின் உடல் நலம் விசாரிக்கிறார். பின்னர் மருத்துவர்களிடமும் கணவரின் உடல் நிலை பற்றி கேட்டறிவார் என்கிறது தகவல்கள்.

முக்கிய செய்திகள் சில:-

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

சசிகலா வரும் போது தினகரனை சிறையில் தள்ள திட்டம்!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*