கேரளம்:தலித்துகள் உட்பட பிரமாணரல்லாதவர்கள் 35 பேர் கோவில் குருக்களாக நியமனம்…!

இளவரசி வீட்டில் தங்குகிறார் சசிகலா…!

“என்னை நம்பி காங் இல்லை:காங்கிரசை நம்பி நானில்லை: -கோஷ்டி மோதலில் குஷ்பு…!

கையெழுத்திட்டு உறுப்பினர் அட்டையை புதுப்பித்தார் கருணாநிதி…!

ரட்டை இலை விசாரணை: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

ஹஷ்ரத் பேகம் : மறைக்கப்பட்ட வீர வரலாறு…!

ஆகமவிதிகளின் படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்பது பிரமாணர்களின் கோரிக்கை. தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு தடை பெற்றதும் ஆன்மீக வாதிகள்தான். பிராமணர்கள் மட்டுமே வருமானம் வரும் பெரிய கோவில்களில் பூசாரிகளாக இருக்கும் நிலையில், கிராமப்புற கோவில்களிலும், வருமானம் ஈட்டாத சிறிய கோவில்களிலும் பிராமணர் அல்லாதவர்களும் பூசாரிகளாக தமிழகத்தில் உள்ளனர்.  பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவில் பூசாரிகளாக ஆகமத்தில் இடமில்லை.

கேரளாவின் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்ட், இந்து ஆலய மதகுரு பணிக்காக, பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த 36 பேரை தேர்வு செய்திருப்பது சமூக மாற்றத்திற்கான செயல்பாடாக நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது.தேர்வு செய்யப்பட்ட 62 பேரின் பெயர்ப்பட்டியல் கடந்த வியாழன் அன்று வெளியிடப்பட்டது. முறையான நேர்முகத் தேர்வுகள், பரீட்சைகளை தொடர்ந்தே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

அரசு பணிகளுக்கு இருக்கும் இட ஒதுக்கீடு முறையின் அடிப்படையில் கேரளாவில் கோவில் மதகுரு பணிகளுக்கான தேர்வு நடைபெறுவது இதுவே முதன்முறை. தேர்வு செய்யப்பட்டவர்கள் திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் கீழ் இயங்கும் ஆலயங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

சபரிமலை கோவிலில் மதகுருக்கள் நியமிப்பதில் இந்த முடிவின் தாக்கம் இருக்கும். சபரிமலை கோவில் திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் கீழ் வருவது ஒரு காரணமாக இருந்தாலும், சபரிமலையில் பிராமணர் மட்டுமே முக்கிய பொறுப்பில் இருக்க அனுமதிக்கப்படுவார் என்பது மற்றொரு காரணம்.

மதகுருவாக விரும்பும் ஒருவரின் தகுதி என்பது சடங்குகள், மரபுகள் குறித்த அவருடைய அறிவை பொறுத்தது, அவருடைய சாதியை பொறுத்தது அல்ல என ஐந்து வருடங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவே திருவிதாங்கூர் தேவஸ்வத்தின் இந்த நடவடிக்கை. எர்ணாகுளத்தில் இருக்கும் நீரிக்கோடு சிவன் கோவிலில் தலைமை குரு  பதவியை  ஒரு ஈழவர்  ஏற்கும் வாய்ப்பு வந்த நிலையில் அது மறுக்கப்பட்ட போது  ராகேஷ்  தொடர்ந்த வழக்கில் இந்த தீப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

முக்கிய செய்திகள் சில:-

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

சசிகலா வரும் போது தினகரனை சிறையில் தள்ள திட்டம்!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*