ராஜமௌலி: ‘மெர்சல்’ பிரம்மாண்ட வெற்றியடையும்? (#வீடியோ_உள்ளே)

விஜய்க்கு வில்லனாகிறார் மகேஷ் பாபு?

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி: படப்பிடிப்பு அறிவிப்பு!

தேனாண்டாள் ப்லிம் ஸ்டுடியோவின் 100-ஆவது படமாக வெளியாகவுள்ளது ‘மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இதன் டீஸர் மட்டும் பாடல்கள் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெர்சல் தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?

இந்நிலையில் ‘மெர்சல்’ திரைப்படம் பற்றி ‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலி பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது தேனாண்டாள் நிறுவனம். அதில் அவர், “தேனாண்டாள் நிறுவனத்தின் 100-ஆவது திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஜய் என இரண்டு திரைத்துறை ஆளுமைகள் பணிபுரிந்திருக்கிறார்கள். இது திரைத்துறையில் அவர்களது 25-ஆம் ஆண்டாகும். இவர்கள் இருவரும் அட்லி இயக்கத்தில் வேலை செய்கிறார்கள், இது ஓர் அற்புதமான கூட்டணி. இந்த திரைப்படம் நிச்சயமாக பிரம்மாண்ட வெற்றியடையும்” என்று தெரிவித்துள்ளார்.

‘மெர்சல்’ திரைப்படம் தெலுங்கு டப்பிங் செய்யப்பட்டு ‘அதிரிந்தி’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகி, தெலுங்கு சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா முதல் விஜய் வரை: அச்சுறுத்தும் தமிழ் ராக்கர்ஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*