மறுபடியும் துகிலெழும்பிய விஜயகாந்த்…!

டார்ஜிலிங்: பாஜக தலைவர்களை தாக்கி துரத்திய தொண்டர்கள் (#வீடியோ_உள்ளே)

கேரளாவில் பிரமணரல்லாத 35 கோவில் குருக்கள் நியமனம்…!

டிஜிட்டல்வாசி: நோபல் பரிசு பெறும் தமிழக அமைச்சர்கள்…!

2016 சட்டமன்ற தேர்தல் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக களமிரங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த். படு தோல்வியை தழுவினார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்த தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகிச் சென்றனர்.
இன்னொரு பக்கம் உடல் நிலை ஒத்துழைக்காத விஜயகாந்த் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தான் கட்சி பணிகளை கண்காணித்து வந்தார்.
தமிழகத்தில் எந்த பொதுப்பிரச்சனைகளிலும் விஜயகாந்தின் குரல் ஒலிக்காத நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு அரசியலில் தன் வேலைகளை துரிதமாக்கியிருக்கிறார்.இப்போது ஊடகங்களைச் சந்திக்க துவங்கியிருக்கும் விஜயகாந்த் புதிய ஆளுநரை சந்தித்து இன்று மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்:-

“ தமிழகப் பிரச்சனைளுக்கு தீர்வு காண கவர்னரிடம் மனு கொடுத்தேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு எதுவும் அனுப்பப்படவில்லை. எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்ட என்னை பற்றி ரஜினி, கமலிடம் கேளுங்கள். சிவாஜிம், கமலும் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீரும் இணைந்ததை பார்க்கிறேன். இப்போது இருக்கும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என்றும் கவர்னரிடம் மனுக்கொடுத்திருக்கிறேன்.

அத்துடன் ” உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதோடு இனி வருங்காலத்தில் தேமுதிக தனித்து போட்டியிடும்” என்றும் அறிவித்தார்.
தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தது. அது 2016 சட்டமன்ற தேர்தலில் பெரும் சரிவை சந்தித்தது. அந்த தேர்தல் தோல்விக்குப் பின்னர் மாவட்ட வாரியாக தேமுதிக நிர்வாகிகள் திமுக, அதிமுக சென்று விட்டனர். இந்நிலையில்தான் விஜயகாந்த் அரசியலில் மறுபடியும் எழுச்சி கொள்ள நினக்கிறார். அது இனி சாத்தியமாவதற்கு வாய்ப்புகள் குறைவு…!

முக்கிய செய்திகள் சில:-

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

சசிகலா வரும் போது தினகரனை சிறையில் தள்ள திட்டம்!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*