வைரலாகும் #mooditupokamal

“ 70 வருட சுதந்திரத்தில் கிட்டத்தட்ட 50 வருடங்களை தமிழர்கள் நாம் கண் மூடிக்கொண்டு கடந்து விட்டோம்” என விகடனில் வெளிவரும் தன்னுடைய ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் நடிகர் கமல்ஹாசன் எழுதியிருப்பதை விமர்சித்து #mooditupokamal எனும் ஹாஷ்டாக்கை வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.

Image may contain: 3 people, text

‘சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்திய நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறவில்லை என எழுதியிருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம், தமிழ்நாட்டை குறிப்பிட்டு சொல்வது அபத்தமானது. இது திராவிட இயக்கத்தை தூற்றுவது போல இருக்கிறது’ என்பது ஒரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது.

Image may contain: 5 people, text
மறுபுறம், ‘இத்தனை நாட்களாக நீங்களும் பேசாமல் தானே இருந்தீர்கள். எந்த போராட்டத்திற்காவது துணை நின்றீர்களா?’ என சிலரும் விமர்சிக்கின்றனர். கமலஹாசன் பாஜகவின் கைக்கூலி என்ற கருத்தும் பரவலாகவே இருக்கிறது.

Image may contain: 2 people, meme and text

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*