காணாமல் போன ஊடகவியலாளரின் வெட்டப்பட்ட தலை கண்டெடுப்பு!

நோபல் வென்ற விஞ்ஞானிக்கு 24*7 பியர் சப்ளையுடன் வீடு !

3D- கேமராவில் படமாக்கப்பட்ட 2.0 (#மேக்கிங்_வீடியோ_உள்ளே)

சசிகலாவிடம் இருந்து ஸ்லீப்பர் செல்களை காப்பாற்ற நிபந்தனை விதித்த ஒபிஎஸ்-இபிஎஸ்…!

திரையரங்கு கட்டணக் கொள்ளைக்கு துணை போன தமிழக அரசு!

வைரலாகும் #mooditupokamal

ஸ்வீடன் ஊடகவியலாளர் கிம் வாலின் உடல் பகுதிகளை டானிஷ் காவல்துறையினர் கண்டுபிடித்தபடி இருக்கின்றனர்.கடந்த ஆகஸ்ட் பத்தாம் தேதியில் இருந்து காணாமல் போன கிம் வால், கார்டியன், தி ந்யூ யார்க் டைம்ஸ் உட்பட பல பத்திரிக்கையில் ஃப்ரீலான்ஸ் ஊடகவியலாளராக இயங்கியவர். கிம் வாலை காணவில்லை என அவருடைய பாய் ஃபிரெண்டு காவல்துறையில் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து விசாரணையை தொடங்கியது டானிஷ் காவல்துறை.

பீட்டர் மேட்சன், எனும் இஞ்சினியரின், நீர்மூழ்கி கப்பலில் அவரை பேட்டி எடுப்பதற்காக ஏறிய போது தான் கிம் கடைசியாக உயிரோடு பார்க்கப்பட்டிருக்கிறார். பிறகு, அவருடைய உடல் உறுப்புகள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

கைது செய்யப்பட்ட மேட்சன், விசாரணையின் போது, முதலில், “ நான் கிம்மை கோப்பன்ஹேகனில் (டென்மார்க்) விட்டுவிட்டேன்” எனச் சொல்லியிருக்கிறார். பிறகு, “ நீர்மூழ்கி கப்பலில் ஒரு விபத்து நடந்த போது தான் கிம் இறந்தார்”எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், கிம் உடலில் 21 கத்திக் குத்து தடயங்கள் இருக்கின்றன என கோப்பன்ஹேகன் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*