சசிகலாவை ஆதரித்த அமைச்சர் செல்லூர் ராஜு…!

அதிமுக தொண்டர் பலம்: தினகரனுக்கே-உளவுதுறை ரிப்போர்ட்…!

எட்டிப்பார்க்கும் ஸ்லீப்பர் செல்: ராஜன் செல்லப்பா!

#Go home Adani’:அதானிக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் போராட்டம்!

ஆளும் கட்சியான அதிமுக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜூ மதுரையில் நடந்த மருத்துவ முகாமை துவங்கி வைத்த பின்னர் ஊடகங்களிடம் பேசியவர் அதிமுக ஆட்சி அமைய சசிகலா உறுதுணையாக இருந்தார் என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சசிகாவுக்கு துரோகம் செய்து விட்டு ஆட்சியை கைப்பற்றிக் கொண்டாலும் கூட அவரது அமைச்சர்களில் பலர் இன்னும் சசிகலா ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். இதைத்தான் தினகரன் ஸ்லீப்பர்செல்கள் என்கிறார். மதுரை பகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பாவும் சசிகலாவை ஆதரித்து பேசிய நிலையில் இன்று மதுரையில் பேசிய செல்லூர் ராஜு:-
“ ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக ஆட்சி அமைய சசிகலா பெரிதும் துணை நின்றார். இன்றைய சூழலில் சசிகலா பற்றி எந்தக் கருத்தையும் கூற முடியாத நிலை உள்ள. அதிமுக அமைச்சராக இருப்பதால் என் தனிப்பட்ட உணர்வுகளையும் கருத்துக்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்கிறேன்” என்றார்.
இதன் மூலம் பன்னீர்செல்வம், ஒபிஎஸ் இருவரும் இணைந்தாலும் கூட அனைவரும் ஓரணியில் இல்லை என தெரிகிறது.அதிமுக எனும் கட்சி ஆளும் கட்சியாக இருப்பதால் அதை நம்பி வரும் லாபங்களுக்காக எடப்பாடி தலைமையில் பலர் செயல்பட்டாலும் ஏராளமானோர் இன்னும் சசிகலா ஆதரவாளர்களாக அமைதியாக இருக்கிறார்கள் என்பது செல்லூர் ராஜு பேச்சில் இருந்து தெரிகிறது.

புதிய ஆளுநர்:ஸ்டாலின் -தினகரன் கருத்துகளும் புரிதல்களும்…!

3D- கேமராவில் படமாக்கப்பட்ட 2.0 (#மேக்கிங்_வீடியோ_உள்ளே)

சசிகலாவிடம் இருந்து ஸ்லீப்பர் செல்களை காப்பாற்ற நிபந்தனை விதித்த ஒபிஎஸ்-இபிஎஸ்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*