’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!

அதிமுக தொண்டர் பலம்: தினகரனுக்கே-உளவுதுறை ரிப்போர்ட்…!

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!

சசிகலாவை ஆதரித்த அமைச்சர் செல்லூர் ராஜு…!
ஜெயலலிதா அமர்ந்திருந்த முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வமும், இப்போது எடப்பாடி பழனிசமியும் அமர்ந்து விட்டார்கள். 33 ஆண்டுகாலம் ஒரே வீட்டில் ஜெயலலிதாவோடு வாழ்ந்த சசிகலா ஜெயலலிதாவோடு தண்டனை அனுபவிக்க வேண்டிய சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கிறார்.
நேற்று திகநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் “பழனிசாமியை முதல்வராக்கி விட்டு ஜெயலலிதாவுக்காக சிறையில் இருக்கிறார் சசிகலா” என்று கூறினார். மேலும் தமிழக காவல்துறை ஓபிஎஸ்- இபிஎஸ் ஆகியோரின் அறிவுத்தலின் படி சசிகலாவுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் குற்றம் சுமத்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு
2016 செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலம் குன்றி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அதற்கு அடுத்த மாதல் அக்டோபர் 18-ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானது.
பெங்களூருசிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பால் சிறைக்குச் சென்றஜெயலலிதா, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்தஉத்தரவுக்கு எதிராக கர்நாடகா அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா அவர் தன் வாழ்வு பற்றி சுயசரிதை ஒன்றை எழுதினார்.

அந்த சுயசரிதையில், சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எழுதியிருந்தார். “சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன’என்று குறிப்பிட்டிருந்தார். நூலின் இந்த பகுதி பெரும் விவாதங்களைக் கிளப்பியது.இந்நூலை மேற்கோள் காட்டி தமிழகத்தைச் சார்ந்த பி.ரத்னம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் “‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஆச்சார்யாஆஜரானபோது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாகக் கூறியுள்ளார். எனவே, அவரிடம் விசாரணைநடத்த வேண்டும். இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாராஎன்பதையும் விசாரிக்க வேண்டும். அவர், தனது புத்தகத்தில் கூறியுள்ள புகார்கள்,குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ரத்னம் தாக்கல்செய்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகிசந்திர கோஸ், அமிதவா ராய்ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்தனது வாதத்தை முன்வைக்க வந்தார். ஆனால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையைஒத்திவைக்க காரணம் என்ன என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கேள்விஎழுப்பினார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டுவழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்குவிசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.நீதிபதிகள் குறிப்பிட்ட நான்கு வாரங்கள் முடிந்து விட்டது. அப்போது வெளியான உச்சநீதிமன்ற வழக்கு பட்டியலில் சொத்துக்குவிப்பு வழக்கு விபரம் எதுவும் இல்லை. இந்நிலையில் 2016 அக்டோபர் 10 –ம் தேதி தொடங்கி 15-ம் தேதியான சனிக்கிழமை வரை தசரா விடுமுறை நீதிமன்றங்களுக்கு விடுமுறை காலம் ஆகும். 17 –ம் தேதி நீதிமன்றம் தன் அலுவலை மீண்டும் துவங்கும் போது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் எனத் தெரிய வரும்.
பின்னர் உடல் நலம்குன்றிய ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அதுவரை தீர்ப்பு வெளியாகவில்லை. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் தொடர்ந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்த அன்றே அப்பல்லோ மருத்துமனையில் வைத்து பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் முரண்பாடுகள் எழுந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் நடந்த இந்தியா டுடே விழாவுக்கு சசிகலாவும், பன்னீர்செல்வமும் அழைக்கப்பட்டார்கள். மேடையில் இருந்த இருவருமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. அரசியல் பிரமுகர்கள் மொத்தமாக கலந்து கொண்ட அந்த விழாதான் இருவருக்கிடையில் அரசியல் முரண்பாடுகள் இருக்கிறது என்பது முதன் முதலாக தெரிய வந்தது.
அதன் பின்னர் சசிகலா பன்னீர்செல்வத்தை இறக்கி விட்டு தான் முதல்வராக முஸ்தீபுகளை துவங்கிய போதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு தேதி வெளியானது. ஒரு வேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பே வந்திருக்காது என்ற கருத்தும் பொது வெளியில் வைக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா இல்லை என்பதால் சசிகலா சிறையில் இருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.இன்று சொத்துக்குவிப்பு வழக்கின் மொத்த பழியையும் சசிகலா குடும்பம் சுமக்கிறது. உண்மையில் அவ்வழக்கின் முதல் குற்றவாளி ஜெயலலிதாதான். அவரதுபதவிக்கு ஆசைப்பட்ட பன்னீரும், எடப்பாடியும் தாங்கள் சிறைக்குச் சென்று விடக் கூடாது என்பதற்காகவே சசிகலாவுக்கு குழி பறித்தார்கள்.
33 ஆண்டுகாலம் சசிகலா இல்லாமல் ஜெயலலிதா இருந்ததில்லை.60 வயதுக்கு மேல் தனக்கு கிடைக்கும் வாழ்க்கை போனஸ் வாழ்க்கைதான் என்று சொன்ன ஜெயலலிதா கூடுதலாக 8 வருடங்கள் வாழ்ந்தார். அந்த வாழ்க்கையும் சரி அதன் பின்னர் மருத்துவமனை, சிறை என ஏதோ ஒரு வகையில் ஜெயலலிதாவின் நிழலாகத்தான் சசிகலாவை தொடர்கிறது அந்த வாழ்க்கை. ஆக மொத்தம் ஜெயலலிதாவுக்காக சசிகலா சிறையில் இருக்கிறார். என்பதும் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு வேளை இருவரும் சிறையில் இருந்திருப்பார்கள் என்பதும் ஒரு பாதி உண்மைதான்.

நோபல் வெல்வாரா ரகுராம் ராஜன்?

அதிமுக தொண்டர் பலம்: தினகரனுக்கே-உளவுதுறை ரிப்போர்ட்…!

3D- கேமராவில் படமாக்கப்பட்ட 2.0 (#மேக்கிங்_வீடியோ_உள்ளே)

சசிகலாவிடம் இருந்து ஸ்லீப்பர் செல்களை காப்பாற்ற நிபந்தனை விதித்த ஒபிஎஸ்-இபிஎஸ்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*