நோபல் வென்ற விஞ்ஞானிக்கு 24*7 பியர் சப்ளையுடன் வீடு !

சசிகலாவை ஆதரித்த அமைச்சர் செல்லூர் ராஜு…!

அதிமுக தொண்டர் பலம்: தினகரனுக்கே-உளவுதுறை ரிப்போர்ட்…!

வேலை வாய்ப்பு : லண்டனின் பியர் டேஸ்ட் பண்ண ஆள் தேவை !

1922 ஆம் ஆண்டு நோபல் விருது வென்ற நீல்ஸ் போஹ்ரை பலருக்கும் பிடிக்கும். அவர் நோபல் பரிசு வென்ற போது அவருக்கு கிடைத்தது போன்றதொரு பரிசை பெறுவதற்கு பெரிய அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லி அங்கலாய்த்துக் கொள்ளத் தான் முடியும்.

1922 ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்ற நீல்ஸுக்கு , கார்ஸ்ல்பெர்க் ப்ரூவரி தங்கள் ஃபாக்டரி பக்கத்தில் இருக்கும் வீட்டை பரிசாக அளித்திருக்கிறது.வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், எந்த சமயம் பியர் குடிக்கும் ஆசை வந்தாலும் அதை உடனடியாக பூர்த்தி செய்து கொள்ள, பியருக்கென ஒரு தனி பைப் லைன் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் கார்ல்ஸ்பெர்க் கம்பெனிக்காரர்கள். ஒரு நாளின் எந்த நேரம் திறந்தாலும் அந்த பைப்பில் இருந்து பியர் வரும்.

போஹ்ர், 1922 ல் நோபல் பரிசு வென்ற பிறகு தான் குவாண்டம் மெக்கானிக்ஸ் தொடர்பான தன் ஆய்வுகளில் இறங்கினார். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அப்போது வேறெந்த விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத சிந்தனைகளை, யோசனைகளை நீல்ஸ் போஹ்ர் துணிந்து ஏற்றார். அதாவது, மற்ற விஞ்ஞானிகள் கட்டுக்கோப்பாக ஒரு பாதையிலேயே யோசித்துக் கொண்டிருந்த போது, போஹ்ரின் எண்ண அலைகள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுடவையாக இருந்தது.பிற்காலத்தில்,போஹ்ரின் கண்டுபிடுப்புகள் பாராட்டப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரசியாமாக, மது நம் சிந்தனையோட்டத்தை நெகிழ்வு தன்மையோடு வைத்துக் கொள்ள உதவும் என்பது பல ஆய்வுகளின் முடிவாக இருக்கிறது.

செய்தி மூலம் :  ஃபோர்ப்ஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*