நோபல் வெல்வாரா ரகுராம் ராஜன்?

நோபல் வென்ற விஞ்ஞானிக்கு 24*7 பியர் சப்ளையுடன் வீடு !

காணாமல் போன ஊடகவியலாளரின்  தலை கண்டெடுப்பு!

அதிமுக தொண்டர் பலம்: தினகரனுக்கே-உளவுதுறை ரிப்போர்ட்…!

 

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த வருடம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வெல்ல வாய்ப்பிருப்பதாக க்லாரிவேட் அனாலிடிக்ஸ் கணிக்கிறது.

வரும் திங்களன்று ஸ்டாக்ஹோல்மில் நடக்கவிருக்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது.

தற்போது சிகாகோ பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் ரகுராம் ராஜன். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதி ரகுராம் ராஜனின் ரிசர்வ வங்கி ஆளுநர் பதவிக்காலம் நிறைவு பெற்றது.அதற்கு பிறகு தான் பணமதிப்பு நீக்கம் எனும் நடவடிக்கை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டு இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய “ I do what I do” புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம் பற்றி எழுதியிருக்கிறார் ரகுராம் ராஜன். மேலும், 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த பங்குச்சந்தை சரிவையும் ரகுராம் ராஜன் முன்னரே கணித்ததாக சொல்லப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு உலக பொருளாதாரத்தை அச்சுறுத்தும் மறைந்திருக்கும் காரணிகள் பற்றி இவர் எழுதிய “Fault lines” புத்தகம் பெரும் அளவில் பாரட்டப்பட்டது. இவர் பல கல்லூரிகளில் சிறப்பு பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*