‘வேட்டைக்காரன்’ படத்துக்கு பிறகு ‘மெர்சல்’ பெற்றது என்ன?

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து உருவான இந்த திரைப்படம், தேனாண்டாள் ஃபிலிம் ஸ்டுடியோஸின் 100-ஆவது படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘மெர்சல்’ என்ற பெயரை ப்ரமோசனுக்கு பயன்படுத்தக் கூடாது என ‘மெர்சலாயிட்டேன்’ பட தயாரிப்பாளர் ராஜேந்திரன் போட்ட வழக்கும் முடிந்து, படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஆனால் இதற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்கு கட்டணக் கொள்ளைக்கு துணை போன தமிழக அரசு!

விஜய் நடித்த படங்களில், கடைசியாக ‘வேட்டைக்காரன்’ படத்துக்கு U/A வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு வந்த அத்துனை படங்களும் U சான்றிதழ் மட்டுமே பெற்றது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ‘மெர்சல்’ படத்துக்கு U/A வழங்கப்பட்டுள்ளது. எனினும் இது படத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என படக்குழு கருதுகின்றனர்.

வைரலாகும் #mooditupokamal

டிஜிட்டல்வாசி: நோபல் பரிசு பெறும் தமிழக அமைச்சர்கள்…!

மீண்டும் துவங்கியது ‘வட சென்னை’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*