#Go home Adani’:அதானிக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள் போராட்டம்!

புதிய ஆளுநர்:ஸ்டாலின் -தினகரன் கருத்துகளும் புரிதல்களும்…!

அதிமுக தொண்டர் பலம்: தினகரனுக்கே-உளவுதுறை ரிப்போர்ட்…!

3D- கேமராவில் படமாக்கப்பட்ட 2.0 (#மேக்கிங்_வீடியோ_உள்ளே)

சசிகலாவிடம் இருந்து ஸ்லீப்பர் செல்களை காப்பாற்ற நிபந்தனை விதித்த ஒபிஎஸ்-இபிஎஸ்…

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கும் அதானிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

அதானி எண்டர்பிரைசஸ் ஆஸ்திரேலியாவில் ‘கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம்’ எனும் புராஜக்டை தொடங்கவிருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்தது. இருப்பினும், தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதனால், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் வேலை தொடங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

‘Stop Adani’ என்றொரு இயக்கம் பல அமைப்புகளை ஒருங்கிணைத்து அதானிக்கு எதிராக இப்போது வரை 45 போராட்டங்களை அரங்கேற்றி வருகிறது.சிட்னியின் போண்டி கடற்கரையில் ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கூட்டம் திரண்டு ‘Stop Adani’ என்ற எழுத்துக்களின் வடிவில் நின்று போராடியிருக்கின்றனர்.

“இந்த மில்லியன் டாலர் மதிப்பான நிலக்கரி சுரங்கம் ஆஸ்திரேலியாவை மட்டுமல்ல, உலகையே பாதிக்கும்” என ஆர்வலர்கள் குழு 350-ஐ சேர்ந்த ப்லயர் பலீஸ் தெரிவித்திருக்கிறார்.

இந்த சுரங்கத்தை அமைப்பதனால் வேலை வாய்ப்புகள் பல உருவாகும் என அதானி சமாளித்துக் கொண்டிருந்தாலுமே, உலகின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தோடு புவி வெப்பமயமாதலும் அதிகமாகும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் என மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*