ஜெய் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

ரஜினி-கமல்: 10% ஓட்டுக்கு மேல் கிடைக்காது: சாருஹாசன்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல் தூறையினரால் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமினில் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஆஜராக கூறி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜாரக தவறிவிட்டார். அதனால் நீதிமன்றம் ஜெய்யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. பின்னர் சமீபத்திய அறிக்கையின்படி 5200 ரூபாய் அபராதம் மற்றும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாத காலத்திற்கு முடக்கிவைத்தனர் சென்னை போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.

இதற்கு முன்பு ஒருமுறை போதையில் கார் ஓட்டிச்சென்று டிவைடரில் இடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது இரண்டாவது முறை என்பதால் அவரது ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்யக்கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெய்யோ இது சம்மந்தமாக எந்த பதிலும் அளிக்கவில்லை, ஊடகங்களின் பார்வையில் இருந்தும் விலகியே இருக்கிறார். ஜெய் தனது நண்பர்களுடன் ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில் பார்டியில் ஈடுபட்டுவிட்டு தானே இரவில் கார் ஓட்டியுள்ளார் உடன் நடிகர் பிரேம்ஜி அமரன் இருந்ததாக கூறப்படுகிறது.

அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!

சசிகலாவை ஆதரித்த அமைச்சர் செல்லூர் ராஜு…!

நோபல் வெல்வாரா ரகுராம் ராஜன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*