நோபல் வென்ற அறிஞர் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்தவர் !

முற்போக்கு இயக்கங்களுக்கே இப்பெருமை ஸ்டாலினுக்கு பினாராயி விஜயன்…!

ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றிருக்கும் ரிச்சர்டு ஹெச் தாலெர் , பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தவர்.

இன்று, ஸ்டாக்ஹோல்மில் நடந்த விழாவில் பொருளாதாரத்திற்கான இந்த வருட நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்டு தாலெர் இந்த விருதை வென்றிருக்கிறார். இவர் ‘பிஹேவியோரல் எகானாமிக்ஸ்’ எனும் பாடத்திற்கு மிக முக்கியமான அடித்தளத்தை அமைத்தவர்.

சிகாகோ பூத் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியரான ரிச்சர்டு தாலெர்,  ‘நட்ஜ்’ (Nudge) எனும் புத்தகத்தினால் பொருளாதார அறிஞர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். ரிச்சர்டு, மனித உளவியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை நிறுவுகிறார் என நோபல் பரிசை வழங்கிய கமிட்டி தெரிவித்திருக்கிறது.

இங்கே, ரிச்சர்டு தாலெர், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது, “இது நான் நெடுநாள் ஆதரித்த ஒரு பாலிசி. கேஷ்லெஸ் ஆக மாற முதல் நடவடிக்கை மற்றும் ஊழலை குறைக்க சிறந்த வழி” என இவர் ட்விட்டரில் எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாக பல அறிஞர்கள் விளக்கிச் சொல்கிறார்கள்.மனித உளவியலை மையமாக கொண்டு எழுதும் ரிச்சர்டு , இந்திய மக்களின் துயரை ஏன் கணிக்கவில்லை?

ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*