அடிதடியில் ஈடுபட்டதாக சந்தானம் மீது புகார்?

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘வைகை புயல்’

பணப்பிரச்சனையில் கட்டுமான நிறுவனர் சண்முகசுந்தரம் என்பவரை தாக்கியதற்காக நடிகர் சந்தானம் மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் அலுவலகம் நடத்தி வருபவர் சண்முகசுந்தரம். நடிகர் சந்தானம், குன்றத்தூர் பகுதியில் ஓர் மல்டிபிளக்ஸ் மால் கட்டுவதற்காக இவரை தொடர்பு கொண்டிருக்கிறார். கட்டுமான பணிகளுக்கான திட்டம் போடப்பட்ட பின்னர் முன்பணம் கொடுத்துள்ளார் சந்தானம். ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதனால் தான் கொடுத்த முன்பணத்தை கேட்டிருக்கிறார் சந்தானம், சண்முகசுந்தரம் தருவதாக சொல்லி ஏமாற்றிய வண்ணம் இருந்திருக்கிறார்.

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

இந்நிலையில் நேற்று சந்தானம், சண்முகசுந்தரத்தை சந்திக்க சென்றபோது வாய் வார்த்தை தடித்து சண்டையில் முடிந்திருக்கிறது. சந்தானம் மற்றும் அவரது மேனேஜர் இருவருக்கும் காயம், அதேபோல் சண்முகசுந்தரம் மற்றும் அவரது தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சந்தானம், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த கட்டுமான நிறுவனர் சண்முகசுந்தரம், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சந்தானம் மீது புகார் அளித்துள்ளார்.

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*