குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பமறுத்தால் சிறை ! : உ.பி அமைச்சர்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிறையில் கிடக்க வேண்டியிருக்கும் என உத்திரபிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தெரிவித்திருக்கிறார்.

சமூகதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில்,ஓம்பிரகாஷ் வீராவேசமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதவர்களை எச்சரிப்பதை பார்க்க முடிகிறது.

“நான் ஒரு சட்டத்தை இப்போது இயற்றப் போகிறேன். ஏழைகளின் குழந்தைகள் பள்ளிக்கு போகவில்லையென்றால், அவர்களுடைய பெற்றோர்கள் ஐந்து நாட்கள் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களுக்கு சாப்பாடும், தண்ணீரும் கொடுக்க மாட்டோம்.இப்போது வரை, உங்கள் தலைவராக, உங்கள் மகனாக, உங்கள் சகோதரனாக நான் சொல்லிப் பார்த்தேன்.நீங்கள் நான் சொல்வதை கேட்டு நடக்கவில்லையெறால், அடுத்து ஆறு மாதம் நான் முயற்சிப்பேன். இந்த குற்றத்திற்காக நான் மரண தண்டனை வழங்கவும் அஞ்ச மாட்டேன்” என அவர் பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ சர்ச்சைக்கு உள்ளான பிறகும் கூட, “ ஆமா, நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?! அரசு எல்லா வசதிகளை செய்து கொடுத்தும் ஏன் இவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவதில்லை?” எனக் கேட்டிருக்கிறார் ஓம் பிரகாஷ் ராஜ்பார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*