கோகுல்ராஜ் கொலை:வழக்கு முடியும் யுவராஜுக்கு ஜாமீன் கிடையாது: உச்சநீதிமன்றம்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சேலம் மாவட்டம் ஒமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். திருச்செங்கோடு கோவில் ஒன்றில் இருந்து சிலர் கோகுல்ராஜை அழைத்துச் செல்லும் விடியோக்கள் வெளியான நிலையில் இந்த கொலையில் பலரும் கைது செய்யப்பட்டார்கள்.

கோகுல்ராஜ் சடலமாக

இந்த வழக்கை விசாரித்த பெண் டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். யுவராஜ் கைது விவகாரத்தில் சில உயரதிகாரிகளின் அழுத்தமே விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்று செய்திகள் வெளியான நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை என்ற அமைப்பின் தலைவர் யுவராஜ் 2015 அக்டோபரில் போலீசில் சரணடைந்தார். தமிழக போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்த யுவராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். யுவராஜுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய யுவராஜுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த உச்சநீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கை 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதுவரை யுவராஜுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் ரத்து ஆனதால் கைது செய்யப்பட்ட யுவராஜ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*