சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

தமிழகத்தில் சாதிக் கொலைகள் அதிகம் நடப்பது தென்மாவட்டங்களில்தான். இரு சாதிகள் மோதிக் கொண்டு நூற்றுக்கணக்கில் இறந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் கொலைகளுக்கு எணிக்கையே கிடையாது எனும் நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள ஆத்தூர் புல்லாவெளியைச் சேர்ந்த சிங்காரம் என்பவர் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுபாஷ் பண்ணையார் திருநெல்வேலி நீதிமன்றம் சரணடைந்தார்.
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு உறுப்பினராக சிங்காரம் செயல் பட்டு வந்த நிலையில். அவர் பசுபதி பாண்டியனுக்கு நெருக்கமாக இருந்த நிலையில் கொலை வழக்கொன்றில் சிறையில் இருந்த இவரை கடந்த பிபரவரியில் போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்த போது காரில் வந்த நபர்கள் போலீஸ் வேனை வழி மறித்து சிங்காரத்தை வெட்டி சாய்த்தனர்.
பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட சிங்காரம் போலீஸ் கண் முன்னே கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இக்கொலை தொடர்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்வின் ராபர்ட், அனிஸ் குமார் உட்பட 13 பேரை கைது செய்தனர். சிங்காரம் கொலையில் பிரதான குற்றவாளியான சுபாஷ் பண்ணையாரை போலிசார் தேடிய நிலையில் அவர் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றத்தின் அனுமதியுடன் சுபாஷ் பண்ணையாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது காவல்துறை.
தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தனது வழக்கறிஞருடன் சுபாஷ் பண்ணையார் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார். சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் ஆஜரானதையொட்டி தென் மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*