பல்கலைகழகங்களின் பெயரில் ‘இந்து’, ‘முஸ்லிம்’ வார்த்தை நீக்கம் : யூ.ஜி.சி

அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தின் (ஏ.எம்.யூ) பெயரில் இருந்து ‘முஸ்லிம்’ எனும் வார்த்தையையும், பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் இருந்து ‘இந்து’ எனும் வார்த்தையும் நீக்க வேண்டும் என பல்கலைகழகங்கள் மானியங்கள் கமிஷன் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆணைப்படி , யு.ஜி.சி அமைத்த கமிட்டி பத்து மத்திய பல்கலைகழகங்களுக்கு எதிராக இருக்கும் புகார்களை விசாரணை செய்தது. விசாரணையை தொடர்ந்து, ஏ.எம்.யூ-வை அலிகார் பல்கலைகழகம் என்று அழைக்கலாம் அல்லது அதை நிறுவிய சார் சையத் அஹமது கானின் பெயர் வைக்கப்படலாம் என்று கமிட்டி அறிவுறுத்தியது. இதே காரணத்திற்காக பனராஸ் இந்து பல்கலைகழகத்தில் ‘இந்து’ எனும் வார்த்தையை நீக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கல்வி நிலையங்களின் மதச்சார்பின்மை கொள்கையை பிரதிபலிக்கவே,இந்த பெயர் மாற்றம் அறிவுறுத்தப்படுகிறது.அலிகார் பல்கலைகழகம் நிலப்பிரபுத்துவத்தின் சாயலோடு இருப்பதாக தெரிவித்த கமிட்டியின் அறிக்கை, வளாகத்தில் இருக்கும் ஏழை இஸ்லாமியர்கள் முன்னேற்றம் அடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

மேலும், அலிகார் பல்கலைகழகத்தில் பேராசிரியர்களாக இருப்பவர்கள் எல்லாம் இதே பல்கலைகழகத்தில் படித்தவர்களாக இருப்பது எதனால்? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது கமிட்டியின் அறிக்கை. கூடவே, பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு தான் பல்கலைகழகத்தில் பணியாற்ற முடியும் எனும் விதியை அமல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*