பாலா, விக்ரம் மற்றும் தனுஷ் கூட்டணி?

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

சந்திப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா மற்றும் சாலினி பாண்டே முன்னணி கதாபாத்தில் நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி’. தெலுங்கு சினிமா ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். தெலுங்கு திரையுலகில் மாற்று சினிமாவுக்கு வழிவகுக்கும் திரைப்படம் என பலராலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ளார். இதனை இயக்க பாலாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்தின் மூலமாக விக்ரம் திரைப்பயணம் மாறியது போல அவரது மகனுக்கு இந்தத் திரைப்படம் ஒரு நல்ல என்ட்ரியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘நாச்சியாள்’ படத்தின் வேலைகள் முடிந்ததும் இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும். இந்த படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் பெற்றிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதில் அவர் நடிக்காமல், துருவ் விக்ரமுக்கு வாய்ப்பளித்திருக்கிறார்.

சினிமா செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‘வைகை புயல்’

ரஜினி-கமல்: 10% ஓட்டுக்கு மேல் கிடைக்காது: சாருஹாசன்

திரையரங்கு கட்டணக் கொள்ளைக்கு துணை போன தமிழக அரசு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*