“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

“விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்  பிரபாகரனின் உடலை பார்த்த போது வேதனையாக இருந்தது” என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி வதோதராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய  ராகுல் காந்தி,“2014 ஆம் ஆண்டு  நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியில் இருந்து நான் நிறைய  கற்றுக் கொண்டேன்.எங்கள் குடும்பம் காந்திய கொள்கையுடையது. என் அப்பாவை கொன்ற பிரபாகரன், இறந்த பிறகு, அவருடைய உடலை பார்த்ததும் மிக வேதனையாகத் தான் இருந்தது.அது பற்றி  ப்ரியங்காவிடம் சொன்ன போது, எனக்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று அவர் சொன்னார் ” என ராகுல் காந்தி கூறினார்.கூடவே, அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவை விமர்சித்த ராகுல், பாஜகவின் பெண்களுக்கு எதிரான-கோட்பாட்டை விமர்சித்தார். ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் ஒரு பெண்ணையாவது பார்க்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*