பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் ‘ஆண்ட்டி-இண்டியன்’ படைகள் : ராஜ்நாத் சிங்

IANS/PIB

“இந்தியாவிற்கு எதிராக இயங்கும் படைகள்” தான் இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சித்தது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருகிறார்.

அரக்கோணத்தில் நடந்த தொழிற்துறை பாதுகாப்புப்படை அணிவகுப்பில் பங்கேற்ற அவர், “ தீவிரவாதம் மிக முக்கியமான பிரச்சினை, பல தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை குறி வைத்திருக்கின்றன” என சொன்னார்.

இந்தியாவின் பொருளாதாரம் சர்வதேச அளவில் முதல் பத்து இடங்களில் இருந்தது, 2030-ன் முடிவில் இந்தியா முதல் மூன்று நிலைக்குள் வந்திருக்கும் என உலகம் உணரத் தொடங்கியது என்று சொன்ன ராஜ்நாத் சிங், “ஆனால், சில ஆண்டி இண்டியன் படைகளுக்கு இதில் இஷ்டம் இல்லை. இந்திய பொருளாதாரத்தை எங்கிருந்து தாக்கினால் பாதிப்பு ஏற்படுமோ அங்கிருந்து அடிக்க முயற்சிக்கிறார்கள்” என்றும் சொன்னார்.

பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி குறித்து பாஜக கட்சியை சேர்ந்த பலரே வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கிய பிறகும் கூட, மேலும் மேலும் பொய்களை பேசி குடிமக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் தான் நம் தலைவர்களாக இருக்கிறார்கள்.IAN

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*