இலைக்கு இது போதாத காலம்…!

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

இலை இனி இல்லை:ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் தாமரை சின்னத்தில் போட்டி!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

சதீஷ்குமார் மரணம்:வழக்கில் சிக்கும் தங்க மாரியப்பன்…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!அதிமுகவின் வரலாற்றில் இரண்டாவது முறையாக இரட்டை இலை முடக்கப்பட்டிருக்கிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது பன்னீர்செல்வம் கொடுத்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. ஆனால் இந்த முறை அத்தனை எளிதில் அதிமுகவின் எந்த அணிகளுக்கும் இரட்டை இலை கிடைக்காது என்றே தெரிகிறது.
அதிமுக பல்வீனமான ஒரு கட்டியாக தங்களை பின் தொடர வேண்டும் என்றே மத்தியில் ஆளும் பாஜக நினைக்கிறது. இப்போதைக்கு இருக்கும் நிலை போன்ற நிலையைத்தான் பாஜக விரும்புகிறது. அதாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும். இரட்டை இலையும் வேண்டும் என்பதால் தங்களுக்கு ஆதரவான ஒரு ஆட்சியை மாநிலத்தில் நடத்துவதையே பாஜக விரும்புகிறது எனும் நிலையில்தான்.
எடப்பாடியும் பழனிசாமியும் ஒன்றிணைந்தார்கள். அந்த இணைவுக்குப் பின்னால் பாஜக இருந்தது. பாஜகவுக்காக பஞ்சாயத்து செய்தவர் பாஜக ஆதரவு பத்திரிகை ஆசியர். அவர்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிற இரட்டை இலையை மீட்க வேண்டும் என்பது அல்ல, பாஜக தலைவர்களும் இரட்டை இலை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் “இலை இனி இல்லை” என்பது போல்தான் இருக்கின்றன. பாஜகவின் தோளோடு தோள் சேர்ந்திருக்கும் அதிமுகவின் சின்னம் பற்றிய பாஜக தலைவர்களின் கருத்துக்களுக்கு அதிமுக அமைச்சர்கள் வாயே திறப்பதில்லை. காரணம் ரெய்ட் அச்சம்.
இந்நிலையில்தான் பன்னீர்செல்வம் எடப்பாடி அணியினர் இரட்டை இலை இரண்டு நாட்களில் கிடைத்து விடும் என்று பேசி வந்தனர். தினகரன் அணியினரோ கூடுதலான ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டனர். இது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில் தேர்தல் ஆணையத்திலும் இதே வாதத்தை மீண்டும் மீண்டும் வைக்க 13-ஆம் தேதி நடைபெற வேண்டிய தினகரன் கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
கூடுதலான ஆவணங்களோடு தினகரன் தரப்பு தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் நிலையில் இரு அணிகளுக்கும் இலை கிடைக்காமல் இழுபறியாகும் நிலையே நீடிக்கும் என தெரிகிறது. அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் இரட்டை இலை யாருக்கு என்பது பற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கும் நிலையில், இலை கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் மூன்றாவது சக்தியின் கைகளில் உள்ளது. இலைக்கு இனி போதாத காலம்தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*