”ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு அருகதையில்லை”:யஷ்வந்த் சின்ஹா

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய் ஷா நிறுவனத்தின் முறைகேடுகள் தி வயர் இணையதளத்தின் மூலம் அம்பலமான நிலையில் “ஊழலைப் பற்றி பேசும் தகுதியை பாஜக இழந்து விட்டது” என்று கூறியிருக்கிறார் பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா.

முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா சமீபகாலமாக பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை. ஜி.எஸ்.டி அமல் என அவர் பொது வெளியில் வைத்த விமர்சனங்கள் நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கும் அவருக்குமான மோதலாக விரிவடைந்த நிலையில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார் யஷ்வந்த் சின்ஹா.
இந்நிலையில்தான் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் நிறுவனங்கள் திடீரென ஈட்டிய பல கோடி சொத்து மதிப்பு பற்றி தி வயர் இணைய தளம் அம்பலப்படுத்தியது.இதை வைத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சித்து வரும் நிலையில் யஷ்வந்த் சின்ஹாவும் கடுமையாக மீண்டும் பாஜகவை விமர்சித்துள்ளார்.
“ அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா செய்த முறைகேடுகள் அம்பலமான நிலையில் பாஜகவுக்கு ஊழல் பற்றி பேசும் அருகதை இல்லை. ஜெய்ஷாவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? அவரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அரசுத்துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெய்ஷாவுக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா ஆஜராகி இருக்கிறார். அரசுக்காக ஆஜராக வேண்டியவர் ஒரு தனிநபருக்காக ஆஜராகிறார்.மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஒரு தனி நபருக்காக ஆஜராவது என்பது இதற்கு முன்னர் நடக்காத ஒரு நிகழ்வாகும். அமித்ஷா மகனுக்கு மின்சார துறை அமைச்சகம் கடன் கொடுத்துள்ளது.மின் துறை அமைச்சர் பியுஷ்கோயல் ஜெய்ஷாவுக்காக பேசியிருப்பது ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*