சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

இலைக்கு இது போதாத காலம்…!

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

பெண்களுக்கு சம உரிமையா? நெவர்! – இஸ்லாமிய அமைப்பு

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

வைரலாகும் ராகுல்காந்தி நடனம்…!
ஐந்து நாள் பரோலில் வந்த சசிகலாவின் பரோல் விடுமுறை இன்றோடு முடிகிறது. நாளை மாலை 5 மணிக்குள் அவர் மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் செல்ல வேண்டும் என்னும் நிலையில், சசிகலா யாரையும் சந்திக்கக் கூடாது என்று ஒபிஎஸ்-இபிஎஸ் தரப்பு அழுத்தம் கொடுத்து சேர்க்கப்பட்ட விதிமுறையால் அமைச்சர்வைக்குள் அதிருப்தி உருவாகியிருக்கிறது.
ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி கலைந்து விடக்கூடாது என்பதுதான் அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆசை. அதனால்தான் எடப்பாடி உள்ளிட்ட எவரையும் அவர்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒபிஎஸ்- இபிஎஸ் குழுவினர் சசிகலாதான் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டது போல பேசுவதையும், அவரை பார்க்கவே கூடாது என்று கண்டிஷன் போட்டுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அதிமுக கூட்டணி கட்சி உறுப்பினர் கருணாஸ் இது பற்றி நேரிலேயே முதல்வரிடம் கேட்டிருக்கிறார். நிபந்தனைகள் தொடர்பாக கருணாஸ் கேட்ட கேள்விகளுக்கு “நான் எந்த நிபந்தனைகளும் போட விரும்பவில்லை. ஆனால் ஒபிஎஸ்தான் நிபந்தனகள் போடச் சொன்னார்” என்று சொன்னதாக தகவல்கள் கசிகிறது. முதல்வரின் பேச்சில் அதிருப்தி அடைந்த கருணாஸ் வெளியில் வந்து “சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் சதி உள்ளது” என்று கூறினார்.
முக்கியமான சில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சசிகலா தரப்பை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். செல்லூர்ராஜு “மாண்புமிகு சின்னம்மா” என்று சொன்னதற்கு தினகரன் தரப்பு “ஸ்லீப்பர் செல்” என்று அடித்த கமெண்டுகளையும் அவர்கள் விரும்பவில்லை. சின்னமாவுக்கு உண்மையாக இருக்கிறோம். ஆனால் இந்த ஆட்சி நீடிக்கும் வரை யார் முதல்வரோ அவர்களை ஆதரிப்போம். சின்னம்மாவே முதல்வராவதாக இருந்தால் எங்கள் ஆதரவு அவருக்குத்தான். எங்கள் விருப்பம் அம்மா உருவாக்கிய ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதுதான். என்றிருக்கிறார்கள். இதனால் தினகரன் தன் ஆதரவாளர்களை அழைத்து ஸ்லீப்பர் செல் என்று கமெண்ட் அடிப்படை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். இனி காய் நகர்த்தல்கள் வேறு மாதிரி இருக்குமாம்.

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*