சதீஷ்குமார் மரணம்:வழக்கில் சிக்கும் தங்க மாரியப்பன்…!

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

இலைக்கு இது போதாத காலம்…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!
பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனை சதீஷ்குமார் என்ற தொழிலாளி இறந்த வழக்கில் சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாரியப்பனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் அருகே உள்ள ஓமலூரை ஒட்ட்டிய பெரிய வடகம்பட்டி இதே கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ்குமார் கடந்த ஜூன் மாதம் வேலைக்கு பைக்கில் சென்ற போது முன்னால் சென்ற கார் மீது மோதி கீழே விழுந்தார்.அந்தக் கார் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனின் காராகும். இந்த விபத்தில் காரின் பின்பக்க கதவில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி மாரியப்பன் தன் நண்பர்களுடன் சதீஷ்குமார் வீட்டிற்குச் சென்று காரில் வந்து மோதியது தொடர்பாக அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.அதற்கு அடுத்த சில தினங்களில் சதீஷ்குமார் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடக்க இது தொடர்பான சர்ச்சையில் மாரியப்பன் சிக்கினார்.
சதீஷ்குமாரின் தாயார் மாரியப்பன் மீது புகார் கொடுத்த போதும் அதை போலீசார் பெற்று க்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பு கோரி சதிஷ்குமாரின் தாய் முனியம்மாள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக தங்க மாரியப்பனின் பெயரை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.மாரியப்பனை குற்றம்சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்க்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சதீஷ்குமார் மர்ம மரணத்தில் தங்க மாரியப்பன் பெயர் சேர்க்கப்படும் நிலையில் அவர் வாழ்க்கை இனி திசைமாற வாய்ப்பு உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*