டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

பெண்களுக்கு சம உரிமையா? நெவர்! – இஸ்லாமிய அமைப்பு

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

வைரலாகும் ராகுல்காந்தி நடனம்…!
தமிழகம் முழுக்க டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் மடிந்திருக்கிறார்கள். குழந்தைகள் முதியவர்கள் என நானூறுக்கும் மேற்பட்டவர்கள் மடிந்திருக்கும் நிலையில் அத்தனை அரசு மருத்துமனைகளும் நிரம்பி வழிகின்றன.
ஆனால் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூட டெங்கு பரிசோதனைக் கருவிகள் முழுமையாக இல்லை. அதனால் காய்ச்சலோடு வந்து மரணித்து பிணமாக போகும் போது இறந்தவர்களின் உறவினர்களுக்கு என்ன காய்ச்சலாம் இறக்கிறார்கள் என்று தெரிவதில்லை.
என்ன காய்ச்சலாக இருந்தாலும் அதை மர்மக்காய்ச்சல் என்று சொல்லி விடுகிறது அரசு. மர்மக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை மட்டும் பல நூறை தாண்டுகிறது. டெங்கு என ஒத்துக் கொண்டால் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் எனும் நிலையில் மர்மக் காய்ச்சல் என்று கதையை முடித்து விடுகிறார்கள்.

டெங்கு மரணம் தொடர்பான வினவு இணைய ஊடகத்தின் கட்டுரை ஒன்றில்,
// கடந்த ஜனவரி 2017 முதல் 12,000 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொது சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 400 -க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதகாவும், நாளொன்றுக்கு 10 பேர் டெங்குவால் இறப்பதாக செய்திகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மருத்துவ அவசர நிலையை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். // என்கிறது.
ஆனால் ஆளும் அரசோ அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் டயர்களைக் கொளுத்தி விட்டோம். நிலவேம்பு கொடுத்து விட்ட்டோம் என்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதிலும், போட்டி போட்டு கட் அவுட்கள் வைப்பதிலுமே குறியாக இருக்கிறது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எனும் பெயரில் முதலமைச்சரும் அமைச்சர்களும் நடத்தும் கோமாளிக்கூத்துகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கி தலைமை அரசு மருத்துவமனைகள் வரை பட்டுக்கைகளும் இல்லை. நோயாளிகளை கவனிக்க தாதிகளும் இல்லை. இந்த அவலங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்று அரசு மருத்துவமனைகளில் ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மருத்துவமனையில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என்று போர்ட்  வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஒரு படுக்கையில் இரண்டு மூன்று நோயாளிகளைக் கூட கிடத்தி வைத்திருக்கும் அவலங்கள் நகர மருத்துவமனைகளிலேயே நடக்கிறது.கூட்டம் கூட்டமாக வந்து உரிய சிகிச்சை இன்றி மக்கள் மடிந்து கொண்டிருக்கும் போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வைது மன மகிழ் மன்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு.

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*