பணமதிப்பிழப்பு:நோபல் வென்ற ரிச்சர்ட் தாலர் சொன்னது என்ன?

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

 

2016 நவம்பர் 8-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்நடவடிக்கையை அப்போது பல பொருளாதார அறிஞர்கள் கடுமையாக விமர்சித்தனர். சிலர் வரவெற்றனர்.
50 நாட்களுக்குள் நிலமை சரியாகும் என பாஜக கூறி வந்த நிலையில் சிறு தொழில்கள் உட்பட சில்லறை வணிகம் பெரும் நசிவை சந்தித்தது. ஆனால் அதே நேரம் ஆன் லைன் வணிகமும், மின்னணு பொருளாதார பரிவர்த்தனைகளும் பெரும் லாபம் ஈட்டின. பொதுவாக உள்ளூர் தொழில்களுக்கு நசிவும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயமாகவும் அந்த நடவடிக்கை அமைந்தாக பொது வெளியில் விமர்சிக்கப்பட்ட நிலையில்,
இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணரான, முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் தாலர் இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தவர் என்று பாஜகவினரும், அவர் ஆதரிக்கவில்லை என்று பாஜக எதிர்ப்பாளர்களும் கூறி வருகிறார்கள்.
சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியரான ரிச்சர்ட் தாலர் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி // பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகச்சிறந்த நடவடிக்கை ஆகும். உயர் மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்// என்று கூறியிருந்தார்,
ஆனால் புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை விட இரு மடங்கு மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட போது தன் //அப்படியா அடடா// really? Damn.
— Richard H Thaler (@R_Thaler) November 8, 2016என்று தன் ஆச்சரியத்தை மட்டும் பதிவு செய்திருந்தார். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி பதவியில் இருந்து விலகிய போது அது பற்றி கருத்து தெரிவித்த தாலர் //இது இந்தியாவுக்கு இழப்பு, நமக்கு ஆதாயம். ரகுராமை நாம் மீண்டும் பெறுவது மிகச்சிறந்த ஒன்று// என்று கூறியிருந்தார்.

முக்கிய செய்திகள்

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*