மதுரை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி…!

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

சதீஷ்குமார் மரணம்:வழக்கில் சிக்கும் தங்க மாரியப்பன்…!

இலைக்கு இது போதாத காலம்…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

விஜயதசமி பண்டிகையை ஒட்டியும் ஆர்.எஸ்.எஸ் துவக்க நாளை நினைவுகூறும் வகையிலும் ஆர்.எஸ். எஸ் அமைப்பினர் ஊர்வலங்களை நடத்துவது வழக்கம். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை இந்த  ஊர்வலங்கள் தமிழகத்தில் நடத்தப்பட வில்லை. அவர் மரணத்தின் பின்னர் பன்னீசெல்வம் முதல்வராக இருந்த போது ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சி காரணமாக சென்னையில் 144 தடை விதிக்கப்பட்டது.

மக்கள் கூடவே தடை விதிக்கப்பட்ட நிலையில் 144 அமலில் இருந்த அந்த நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சென்னையில் நடத்த அனுமதி கொடுத்தார் அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம். அதன் தொடர்ச்சியாக பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தியது. மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆர்.எஸ்.எஸ் பேரணியை துவங்கி வைப்பார் என்று அறிவித்த நிலையில். அவர் அதை மறுத்திருந்தார். இந்நிலையில் போலீசார் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதித்தனர்.

அவர்கள் மதுரை நீதிமன்றத்தில் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி வழக்குத் தொடர மதுரை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஊர்வலத்திற்கு அனுமதியளித்துள்ளது.மதுரை  புறவழிச்சாலையில் இருந்து பழங்காநத்தம் வரை பேரணி செல்ல நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. பேரணியின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், பேரணியில் செல்பவர்கள் கையில் ஆயுதங்கள், கம்பு, லத்தி உள்ளிட்ட எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்றும், முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

tamilnadu political news

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?

ஜெ மரணம் :சிக்கலில் ஓபிஎஸ்-இபிஎஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*