யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!
சுபாஷ் பண்ணையார் இன்று தென் மாவட்டங்களில் இந்த பெயரைக் கேட்டாலே ஒரு அச்சம் பரவுகிறது. பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் இவர் மீது இருந்த போதும் ஒரு நாள் கூட இவர் சிறையில் இருந்ததில்லை. பணம்,அரசியல் செல்வாக்கு என தென் மாவட்டத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் இவர் கடைசியாக சிங்காரம் கொலை வழக்கில் சரணடைந்து ஜாமீன் பெற்று வந்திருக்கிறார். கோகுல்ராஜ் கொலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற யுவராஜின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில் சுபாஷ் பண்ணையாருக்கு கிடைத்திருக்கும் ஜாமீன் அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் வன்முறைதான் வாழ்க்கை என்றாகி எந்த சாதி பிரமுகராக இருந்தாலும் வெளியில் இருப்பதை விட சிறையில் இருப்பதே பாதுகாப்பு என்பதுதான் எழுதப்படாத விதி. அப்படி தானே சரணடைந்து சிறைக்குள் வந்தவர்தான் சுபாஷ் பண்ணையார் ஆட்களால் கொல்லப்பட்ட சிங்காரம். நிலமை இப்படி இருக்க. சுபாஷ் பண்ணையாரால் மட்டும் எப்படி சுதந்திரமாக வெளியில் சுற்ற முடிகிறது?

 

சுபாஷ் பண்ணையார், பசுபதிபாண்டியன், செல்வின் நடார், ஜாண்பாண்டியன் என எதிரும் புதிருமாக மோதி மடிந்த வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் எவருமே தேசத்துக்காக போராடிய தலைவர்கள் இல்லை. இவர்களின் வம்சங்களில் கூட அப்படி ஒரு தியாக மரபை காண முடியாது. சொத்து நிலம் தொடர்பான தகறாறுகள்தான் தென் மாவட்டங்களை ரத்தக்களரியாக்கி இருக்கிறது.

 

நிலம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்திருந்தது. ஏழைகள் அதில் கூலி அடிமைகளாக இருந்தார்கள். ஆண்டான் அடிமை மரபில் அதிகாலை வயலில் இறங்கும் ஏழை தொழிலாளர்களுக்கு கூலியே கிடையாது. ஆண்டை வீட்டு பழைய சோற்றைத்தான் கூலியாக போடுவார்கள். அதுதான் தமிழகம் முழுக்க நடைமுறை. இதற்கு முதன் முதலாக சவுக்கடி கொடுத்தது தஞ்சை மண். உழைப்புக்கு கூலி கொடு என்ற முழக்கம் முதன் முதலாக ஒலித்தது தஞ்சை விவசாய தொழிலாளர்களிடம்தான். ஆதீனங்களிடமும் மடாதிபதிகளிடமும் குவிந்து கிடந்த நிலத்தில் உழைத்துக் களைத்த ஏழைகள் கூலி வேண்டி மடங்கள் வாசலில் மாரடித்து அழத் துவங்க கடைசியில் பழஞ்கஞ்சிக்கு பதில் கூலி கொடுத்தார்கள். தோழர் சீனிவாசராவ் அந்த போராட்டத்தை வர்க்க போராட்டமாக மாற்றி விவசாய தொழிலாளர்களுக்கு கூலியைக் கொடுத்தார்.
தூத்துக்குடி புல்லாவெளி மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணியனுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளியும், உப்பளங்களும் இருந்தன.அவருக்கு அசுபதி, நாராயணன் என இரண்டு மகன்கள். அசுபதியின் மகன் சுபாஷ் பண்ணையார், நாராயணனின் மகன் வெங்கடேஷ் பண்ணையார். திருச்செந்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமத்தில் உள்ள நிலத்தகராறில் வங்கி மேலாளர் ராஜகோபாலுக்கும், பண்ணையார் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது பசுபதிபாண்டியன், ராஜகோபாலுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 1993-ம் ஆண்டு ஜனவரி 14ல் அசுபதி பண்ணையார் கொலை செய்யப்பட்டார். வெங்கடேச பண்ணையாரின் சித்தப்பாவான அசுபதியின் கொலை வெங்கடேச பண்ணையாரை உரசிப்பார்க்க அதிலிருந்துதான் தூத்துக்குடியின் ரத்த வரலாறு துவங்குகிறது. அடுத்த சில நாட்களில் சிவசுப்பிரமணிய நாடாரே கொலை செய்யப்பட பகை பல்கிப் பெருகி டஜன் கணக்கில் கொலைகள் விழ துவங்கியது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வெங்கடேசபண்ணையார் என்கவுண்டரில் கொல்லப்பட அதை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டது திமுக. அவரது துணைவியார் ராதிகா செல்வியை எம்பிஆக்கியது.வெங்கடேஷ் பண்ணையார் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது தம்பி சுபாஷ் பண்ணையார் மூலக்கரை சாம்ராஜ்யத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அந்த மூலக்கரை சாம்ராஜ்யத்தை தக்க வைத்துக் கொள்ளவும். உருவாகியுள்ள அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளவும் சுபாஷ் பண்ணையார் தன் தந்தையின் கொலைக்கு பழி வாங்க முடிவு செய்தார்.
2006 ஏப்ரல் மாதம் எப்போதுவென்றான் பகுதியில் பசுபதி பாண்டியனும் அவரது மனைவி ஜெசிந்தாவும் ஒரு காரில் வந்த போது வழிமறித்த பண்ணையார் கோஷ்டி வழி மறித்து வெட்டியதில் பசுபதி பாண்டியன் தப்பினார். அவரது மனைவி ஜெசிந்தா கொலை செய்யப்பட்டார். பின்னர் ஐந்து ஆண்டுகள் காத்திருந்து பசுபதி பாண்டியனை திண்டுக்கல்லில் வைத்து தீர்த்துக்கட்டியது பண்ணையார் குழு. இதில் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த அருளானந்தம், ஆறுமுகசாமி உள்பட சிலர் போலீஸில் சிக்கினர்.
பதிலுக்கு பசுபதி குழுவினர் சுபாஷ் பண்ணையாரை தீர்த்துக் கட்ட பழைய காயலுக்கு போன போது அவர் தப்பி விட ஆறுமுகச்சாமியும் இன்னொருவரும் சிக்கிக் கொள்ள அவர்களின் தலையை வெட்டிய கும்பல் அதை சுபாஷ் பண்ணையாரின் படத்திற்கு கீழே வைத்து விட்டுச் சென்றது.பதிலுக்கு பதில் பழிக்குப் பழி என்று ரத்த ஆறு ஓட நாம் வெளியில் இருந்தால் கொலை செய்யப்படுவோம் என்பதை உணர்ந்த சிங்காரம் ஒரு வழக்கில் தானாக போய் சரணடைந்தார். பாளையங்கோட்டை சிறையில் இருந்தவரை விசாரணைக்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற போது போலீஸ் வாகனத்தை மறித்து சிங்காரத்தை இழுத்துப் போட்டு வெட்டி படுகொலை செய்தார்கள்.

 

பசுபதி பாண்டியன்,சுபாஷ் பண்ணையார் மோதலாக உருவான இந்த கொலைகள். தென் தமிழகத்தில் சாதி மோதல் எனும் பரிணாமத்தைப் பெற்றுள்ளது தற்செயலானது அல்ல.
இந்த கொலைகளுக்குப் பின்னர் இயங்குவது இரண்டு சாதிகளின் கூலிப்படைகள் அல்ல. அறிவாளில் துவங்கி இப்போது துப்பாக்கி கொலைகள் வரை வளர்ந்து விட்ட இந்த தாதா குழுக்களின் சாதி வெறியூட்டலுக்கு பலியாவது இரு சாதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் தான். “பண்ணையார் சொல்கிறார் செய்து முடி”
“பசுபதிக்காக செய்து முடி” என்று வெறியூட்டும் போது அப்பாவி இளைஞர்களும் ஏதோ சாதிக்கும் சமூகத்திற்கும் சேவை செய்கிறோம் என்று நம்பி கொலைகளை செய்து விடுகிறார்கள்.
முன்னாள் முதல்வர் காமராஜர் அவரது சாதியை நல்வழிப்படுத்தினார். வணிகத்தின் பக்கம் வாசல் திறந்து விட்டார். கல்வி பயில சொன்னார் அவர் வழியை பின்பற்றிய சமூகம் முன்னேறி வந்தது. வணிகமும், கல்வியும் சாத்தியமான சமூகம் வெற்றியை நோக்கி நகர்ந்தது.ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதுவாக இருந்தாலும் அது முன்னேற அறிவுதான் பயன்படுமே தவிற கத்தியோ அறிவாளோ அல்ல. தென் தமிழகத்தில் இரு தாதா சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான மோதலாக உருவாகி இரு சாதிகளையே எதிர் எதிராக நிறுத்தி ரத்தக்களறியாக்கும் இந்த கொலைகள் எப்போது முடிவுக்கு வரும்?
_அஸ்வினி

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*