ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு: அதிர்ச்சியில் தலைவர்கள்!

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள், அமெரிக்க சினிமாத்துறையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது.

Gwyneth Paltrow with Harvey Weinstein on the night she won a Best Actress Oscar for Shakespeare in Love  

ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மூன்று பேரை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், மேலும் நான்கு பேரை வன்புணர்வு செய்ய முயற்சித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்நிலையில், ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஏஞ்சலினா ஜோலியும், க்வெனித் பால்ட்ரோவும் ஹார்வி தங்களையும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கியதாக சொல்லியிருக்கிறார்கள்.

ஹார்வி மீது குற்றச்சாட்டுக்கள் குவியும் நிலையில், அவருடைய மனைவி, ஹார்வியிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். க்ளிண்டன் குடும்பத்தினரும், ஒபாமா குடும்பத்தினரும் ஹார்வியுன் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள் தான். ஆனால், ஹார்வி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை கேட்ட பிறகு, ‘இதை எல்லாம் கேட்கவே அருவருப்பாக இருக்கிறது’ என ஒபாமா சொல்லியிருக்கிறார்.ஹிலாரி க்ளிண்டனோ, குற்றச்சாட்டுக்களை கேட்டு அதிர்ச்சியடைந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.

Movie mogul Harvey Weinstein, left, smiles as first lady Michelle Obama speaks in the East Room of the White House 

இந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் அம்பலப்படுத்தியது ந்யூ யார்க்கர் பத்திரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*