18 வயது அடையாத மனைவியுடன் உறவு கொள்வது வன்புணர்வு தான்!

Photo Courtesy : The Wire

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?
டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

பதினெட்டு வயதை அடையாத மனைவியுடன் உறவு கொள்வது வன்புணர்வு தான் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவன் உறவு கொள்ளும் கொடுமையை (மேரிட்டல் ரேப்) சட்டத்தினால் தண்டிக்கப்படும் குற்றமாக அறிவிக்க வேண்டும் என பல மனுக்கள் கொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 375 , 18 வயதுக்கு கீழ் இருக்கும் பெண்ணோடு உறவு கொள்வது பாலியல் வன்புணர்வு தான் ஆனால் 15 வயதுக்கு மேல் இருக்கும் பெண்ணோடு அவளுடைய விருப்பம் இல்லாமல் அவளுடைய கணவன் உறவு கொள்வது பாலியல் வன்புணர்வு கிடையாது என்று சொல்கிறது. குழந்தை திருமணமும், பாலியல் வண்புணர்வும் அதிகம் நடக்கும் இந்திய திருநாட்டின் உண்மை முகம் இது தான்.

இந்நிலையில், பதினெட்டு வயதை அடையாத பெண்ணோடு அவருடைய கணவன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வதை  எதிர்த்து, அந்த பெண் ஒரு வருடத்திற்குள் வழக்கு பதிவு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

மேரிட்டல் ரேப் சட்டப்படி குற்றம் என்று அறிவிக்கப்பட்டால், திருமணம் எனும் பல்கலைகழகம் உடைந்து நொறுங்கி விடும் என மத்திய அரசு பரிந்துரை செய்திருப்பது மேலும் ஒரு காமெடி.

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

பெண்களுக்கு சம உரிமையா? நெவர்! – இஸ்லாமிய அமைப்பு

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

வைரலாகும் ராகுல்காந்தி நடனம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*