‘அம்மா இட்லி’: வதந்தி பரப்பிய அதிமுகவினரை யார் கைது செய்வது?

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் பாஜக தலைவர்கள்!

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் முகநூலில் விமர்சனம் செய்து வந்த சீர்காழி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரைப் பற்றியும் அதூறாக எழுதியதாக சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள்.
அவர் என்ன எழுதினார் என தெரியவில்லை. முகநூலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான அவதூறுகளும், வதந்திகளும் உருவாக்கப்படுகின்றன. இணையம் பெருமளவு அதற்கே பயன்படுகிறது என்றாலும், இணையத்திற்கும் சமூக வலைத்தளங்களுக்கும் தொடர்பே இல்லாமல்மொத்த தமிழக மக்களிடமும் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பி வந்த அதிமுக அமைச்சர்களையும், தலைவர்களையும் யார் கைது செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களில் இறுதியாக ஒரு நாளுக்கு முன்னர் வரை சி.ஆர். சரஸ்வதி துவங்கி பொன்னையன் என தம்பிதுரை அம்மா இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார், எங்களைப் பார்த்து கையசைத்தார் என டுபாக்கூர் பொய்களை அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இவை அத்தனையும் பொய்கள் என்று அப்போது சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்த போது அவைகளை வதந்திகள் என அடக்கியது அப்போதைய பன்னீர்செல்வம் அரசு.
8 பேர் வரை வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டார்கள்.ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் பிடிவாதமாக தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?
ஆனால் கேள்வி எழுப்பியவர்களை வதந்தி என அடக்கிய அதே தமிழக அரசு இன்று ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது.
”அம்மா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் மன்னித்துக் கொள்ளுங்கள்”என்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இட்லி சாப்பிட்டதாக சொன்னது பொய் என்றால், ஜெயலலிதா உடல் நிலை தொடர்பாக எழுப்பிய கேள்விகள் அனைத்தும் உண்மை என்பதை தமிழக அரசே ஒத்துக் கொண்ட மாதிரி ஆகி விட்டதே. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி வதந்தி பரப்பியதாக ஒருவரை கைது செய்வதற்கு முன்னால், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக வதந்தி பரப்பியவர்களை அல்லவா முதலில் கைது செய்திருக்க வேண்டும்…!

முக்கிய செய்திகள்

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

மகள் ஆருஷி கொலை: பெற்றோர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்…!

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*