ஆருஷி கொலை: பெற்றோர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்…!

AARUSHI TALWAR MURDER____Snapshot of Talwars in their younger and happier days.____Credit only: TORONTO STAR PHOTO

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ஆருஷி வேலைக்காரர் ஹெம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில்  ஆருஷ்யின் பெற்றோர்களை விடுதலை செய்து  அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மருத்துவதம்பதிகள் ராஜேஷ் தல்வார். அவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் மகள் ஆருஷி தல்வாரும், அவர்களது வீட்டில் வேலை செய்யும் ஹெம்ராஜும் கடந்த 2008-ஆம் ஆண்டு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்கள்.
இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த கொலை வழக்கில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறினார்கள்.அதனால் இந்த வழக்கில் சிபிஐக்கு மாற்றப்பட்டது.விசாரணை முடிவில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வாரும், நூபுல் தல்வாரும் குற்றவாளிகள் என காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 2013-ஆம் ஆண்டு முதல் ஆருஷியின் பெற்றோர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள்.


தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு எதிராக இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று முன் தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆருஷி பெற்றொர்களான ராஜேஷ் தல்வார் அவரது மனைவி நூபுர் தல்வாரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை மொத்த இந்தியவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*