“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

தமிழக அமைச்சர்கள் எவரும் இன்று பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், கே.பி. முனுசாமி  ஆகியோருடன் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார் பன்னீர்செல்வம்.  இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பே நமது தமிழரசியல் இணையத்தில் இச்சந்திப்பு பற்றி விரிவாகவே பதிவு செய்திருந்தோம்   இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் நமது சந்தேகங்களை ஒட்டியே இருந்த நிலையில், ஊடகங்களிடம் பேசிய பன்னீர்செல்வம்:-

“ தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவே நாங்கள் பிரதமருடன்  பேசினோம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு பற்றி பேசினோம், அது போல தமிழகத்திற்கு தேவையான கூடுதல் நிலக்கரியை ஒதுக்கித் தருமாறு கோரினோம். பிரதமரும் அவைகளை கனிவோடு கேட்டுக் கொண்டார்.டெங்கு காய்ச்சல் தொடர்பாக மத்தியக் குழு ஒன்றை அனுப்பி அது பற்றி ஆய்வு நடத்துவதாக என்னிடம் அவர் கூறியதன் அடிப்படையில் மத்தியக்குழு தமிழகத்திற்கு விரைவில் வர  இருக்கிறது” என்று பேசினார்.

அவரிடம் நிருபர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும் உங்களுக்கும் இடையில் நிலவும் பிளவு குறித்து பேசினீர்களா? என்று கேட்டதற்கு..

“எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. எந்த நிபந்தனையும் விதிக்காமல்தான் நாங்கள் அதிமுக அணிகள் இணைந்தோம். எங்களுக்குள்  எந்த பிளவும் இல்லை. என்னை கலந்தாலோசித்துதான் மாண்புமிகு முதல்வர் மிக முக்கிய முடிவுகளை எடுக்கிறார். எங்கள் அணியினர் ஓரம் கட்டப்படுகிறார்கள் என்பதில் எந்த விதமான உண்மையும் இல்லை. ” என்றார்.

சசிகலாவை உங்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வருகிறதே என்ற கேள்விக்கு  “ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என்று கிளம்பிச் சென்றார்.

தமிழக அமைச்சர்கள் சிலர் டெல்லியில் இருந்தும் கூட அவர்களை பன்னீர்செல்வம் அணி சந்திக்கவில்லை

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*