ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

மகள் ஆருஷி கொலை: பெற்றோர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்…!

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ஆருஷி வேலைக்காரர் ஹெம்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பில்  ஆருஷியின்  பெற்றோர்களை விடுதலை செய்து  அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த புகழ் பெற்ற மருத்துவதம்பதிகள் ராஜேஷ் தல்வார். அவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் மகள் ஆருஷி தல்வாரும், அவர்களது வீட்டில் வேலை செய்யும் ஹெம்ராஜும் கடந்த 2008-ஆம் ஆண்டு மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார்கள்.
இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த கொலை வழக்கில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறினார்கள்.அதனால் இந்த வழக்கில் சிபிஐக்கு மாற்றப்பட்டது.விசாரணை முடிவில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வாரும், நூபுல் தல்வாரும் குற்றவாளிகள் என காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 2013-ஆம் ஆண்டு முதல் ஆருஷியின் பெற்றோர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள்.

தங்களுக்கு எதிரான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களை இன்று விடுதலை செய்தது.

அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-

# ஆருஷி பெற்றோர்களுக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உருவானதாக இருக்கிறது மாறாக குற்றத்தை நிரூபிப்பவையாக இல்லை.

#சிபிஐ நீதிமன்றம்  அளித்த  தீர்ப்பின் போது தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டிய அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோர்களை உடனடியாக விடுதலை செய்ய ஆணையிட்டது.

#ஆருஷி மற்றும்  ஹெம்ராஜை ஆருஷியின் பெற்றோர்கள்தான் கொலை  செய்தார்கள் என்பதை  சிபிஐ தரப்பு நிரூபிக்க தவறி விட்டது என அலகாபாத் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்தக் கொலை வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஆருஷியின் பெற்றோர்கள். தீர்ப்பைக் கேட்க நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர்கள் காசியாபாத் சிறையில் இருந்தார்கள். தீர்ப்பைக் கேட்ட தல்வார் தம்பதிகள். “தங்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்றார்கள். அழுதார்கள், அப்புறம் ஜெபித்தார்கள்” என காசியாபாத் ஜெயிலர் ததிராம் மௌரியா  கூறியிருக்கிறார்.

#Arushi murder case

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*