‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

இலைக்கு இது போதாத காலம்…!

இலை இனி இல்லை:ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் தாமரை சின்னத்தில் போட்டி!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

சதீஷ்குமார் மரணம்:வழக்கில் சிக்கும் தங்க மாரியப்பன்…!

சட்ட விரோத குட்கா விற்பனைக்காக லஞ்சம் பெற்றது தொடர்பாக எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பிய நிலையில் குட்கா ஆவணங்கள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றதில் இருந்த குட்கா குடோன்களில் கடந்த ஜூலை மாதம் வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அப்போது குட்கா பங்குதாரர் மாதவராவ் வீட்டில் இருந்து டைரி ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் அதில் தடையை மீறி தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய போலீசார் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு எவளவு எவளவு தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதை தேதி வரியாக மாதவராவ் குறிப்பிட்டிருந்தார்.
2011 -முதல் 2016 வரை சுமார் 39 கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறிய நிலையில் லஞ்ச அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி தமிழக அரசுக்கு வருவாய் துறை கடிதம் எழுதியது.நடவடிக்கைக்கு உதவியாக அந்த டைரியில் உள்ள முக்கிய பக்கங்களை நகல் எடுத்து ஆவணங்களைத் தொகுத்து தமிழக அரசிடம் கொடுத்தது. இந்த ஆவணத்தில் ஒரு அமைச்சர், இரண்டு டிஜிபிக்களின் பெயர்களும் சில அதிகாரிகளின் பெயர்களும் இருந்தன. இது பற்றி திமுக செயல் தலைவர் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார். டிஜிபி அலுவலகத்திற்கு முன்னால் குட்கா டீலர் என்று ஒருவர் பேனரும் வைத்த நிலையில் உயர்நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை இப்போது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 17 பேரின் பெயர்கள் உள்ளது அதில் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சரின் பெயரும் இல்லை. டிஜிபிக்களின் பெயரும் இல்லை.தற்போது வெளியிடப்பட்டுள்ள 17 பேர் பட்டியலில் இரண்டே இரண்டு போலீசாரின் பெயர்கள்தான் உள்ளன. மற்றபடி சுங்க துறை, வணிகத்துறை, மாநகராட்சி, உணவுப் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பெயர்களே அதிகம் உள்ளன.
காணாமல் போன ஆவணங்களை திருடியவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தலையிட்டு காணாமல் போன குட்கா ஊழல் ஆவணங்களை கண்டு பிடித்து தண்டிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டிஜிபி அசோக்குமார் பெயரும், அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் துவக்கம் முதலே அடிபட்டு வந்த நிலையில்  குட்கா  குற்றப்பத்திரிகையிலும் இவர்கள் பெயர் இல்லை. இந்நிலையில் குட்கா  ஊழல் ஆவணங்களை திருடியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*