சந்தானம் வழக்கு: பாஜக vs வன்னியர் சங்கம்

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

நடிகர் சந்தானத்துக்கும், பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த் என்பவருக்கும் இடையேயான பணப் பிரச்சனையில் பிரேம் தாக்கப்பட்டார். மல்டிப்ளக்ஸ் மால் கட்டுவதற்காக சந்தானம் பணம் கொடுத்திருக்கிறார். அந்த திட்டம் கைவிடப்பட்டது, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட சந்தானத்தை அவர் ஏமாற்றி வந்ததால் தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது சந்தானம் தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. அதேபோல் பணம் தராமல் காலம் தாழ்த்திய பிரேம் ஆனந்த் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இருவருக்குள்ளான பிரச்சனை பாஜக மற்றும் வன்னியர் சங்கத்துக்கு இடையேயான பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தது பாஜக, தொழில் ரீதியான பிரச்சனையால் தாக்கப்பட்ட பிரேம் ஆனந்த்-க்கு ஆதரவு தருகிறோம் என்ற பெயரில் சந்தானம் பெண் வேடமணிந்த புகைப்படத்தை போட்டு கண்டன போஸ்டர்களை அடிக்கத் துவங்கினார்கள். இந்துத்துவ பாஜக-வுக்கு எதிராக வன்னியர் சங்கம் களத்தில் குதித்தது. நடிகர் சந்தானத்துக்கு ஆதரவாக அவர்கள் பிரேம் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போஸ்டர்கள் அடித்திருக்கிறார்கள். தலைமறைவான சந்தானம் வெளியே வந்தால் தான் இதற்கான முடிவு தெரியும்.

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*