பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

சதீஷ்குமார் மரணம்:வழக்கில் சிக்கும் தங்க மாரியப்பன்…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை அதிமுகவின் பன்னீர்செல்வம் கோஷ்டியினர் அவசரமாக சந்திக்கிறார்கள். பிரதமரை சந்திக்க காலை 11 மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து கிளம்பி டெல்லி வந்து விட்டார்கள் பன்னீர்செல்வம் குழுவினர். தனி அணியாக செயல்பட்டு வந்த அவருடைய குழுவினரான கே.பி. முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், ஆகியோரும் டெல்லி வந்துள்ளார்கள்.
துணை முதல்வரான பன்னீர்செல்வம் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக பிரதமரை சந்திப்பார் என்று செய்திகள் வெளியான நிலையில் உட்கட்சி பூசலிலின் பின்னர் இரு அணிகளும் இணைந்தாலும் கூட தாங்கள் இன்னும் ஒதுக்கப்பட்டதாக உணர்வதாக பிரதமரிடம் கூறி உரிய வழி வகைகளைக் காண வேண்டும் என்று கூறவே பன்னீர் அணியினர் டெல்லி வந்திருக்கிறார்கள்.பன்னீர்செல்வம் அரசு செலவில் டெல்லி வந்திருக்கலாம் .ஆனால் இது அரசு முறை பயணம் அல்ல என்கிறார்கள்.
இரு அணிகளும் இணப்புக்கு பின்னர் பேசி ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை. துணை முதல்வராக இருந்தும் கூட அரசின் முக்கிய முடிவுகளில் தன்னை எதுவும் கலந்து பேசுவதில்லை. முக்கியமான பல கோப்புகள் என் பார்வைக்கே வருவதில்லை. கட்சியை பொறுத்தவரை வழி நடத்தும் குழுவை அமைத்தார்களே தவிர அதிகாரம் பிரிக்கப்படவில்லை. இன்னும் கட்சியின் சாவி மொத்தமும் அவரிடம்தான் உள்ளது.
இரட்டை இலை மீட்பில் கூட எங்களை கலந்து பேசாமல் அமைச்சர் ஜெயக்குமாரை வைத்து அவர் தனியாக செயல்படுகிறார். நாங்கள் தனியாக செயல்படுகிறோம். ஆக மொத்தத்தில் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் ஏன் இணைந்தோம் இப்படி டம்மியாக இருக்கத்தான் இணைந்தோமா என்று நினைக்கிறார்கல். எங்கள் அணியினருக்கு முக்கியமான அமைச்சுப் பொறுப்புகள் வேண்டும். கட்சியின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்று மோடியிடம் பஞ்சாயத்து பேசத்தான் இந்த பயணம் என்கிறார்கள்.மேலும் இதுவரை வந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஒப்புக்கு சப்பா போல பன்னீரையும் இணைத்து சில கூட்டங்களை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
அவரது சொந்த தொகுதியான சேலத்தில் பிரமாண்ட கூட்டத்தை திரட்டி தினகரனுக்கும் செந்தில்பாலாஜிக்கும் சவால் விட்டார். ஆனால் அவருடைய பேச்சைக் கேட்டு தினகரனும், செந்தில் பாலாஜியும் மிரண்டார்களோ இல்லையோ பன்னீர் கொஞ்சம் ஆடித்தான் போனார். இப்போதைக்கு ஆட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்தில் நம் கையை பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி நாளை இரட்டை இலை கிடைத்த உடன் நம்மையும் வெட்டி விட தயங்கமாட்டார். அதனால் எதற்கும் உஷாராக இருப்போம் என்று நவம்பர் -5 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தன் தலைமையில் கொண்டாட தீர்மானித்து அதற்கான இடமும் தேர்வு செய்து விட்டார்.
போடி விலக்கு அருகே உள்ள போஜராஜ் மில்லுக்குச் சொந்தமான மைதானத்தை தெரிவு செய்து அதை சுத்தப்படும் பணியை மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்டு செய்து கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.பல லட்சம் பேரை திரட்ட முடிவு செய்துள்ள பன்னீர்செல்வம் 50,000 கீழ் மட்ட அரசு ஊழியர்களை அந்த விழாவில் அமர வைத்து விட ஆசைப்படுகிறார்.
இன்னொரு பக்கம் நவம்பர் 5-ஆம் தேதி நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மோடியை அழைப்பதும்தான் இந்த டெல்லி பயணத்தின் திட்டங்களில் ஒன்று..!
எது எப்படி என்றாலும் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்குமான பனிப்போர் விரைவில் முடிவுக்கு வரும். அல்லது முடித்து வைக்கப்படும் என்றே தெரிகிறது.

tamilnadu political news

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?

ஜெ மரணம் :சிக்கலில் ஓபிஎஸ்-இபிஎஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*