முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

யார் இந்த சுபாஷ் பண்ணையார்- ஏன் இத்தனை கொலைகள்?

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?
தன் கணவரைக் காண பரோலில் வந்த சசிகலாவின் விடுமுறை இன்றோடு முடிவடைவதால் பெங்களூரு சிறையில் ஆஜராக சென்னையில் இருந்து கிளம்பினார்.

நிறைவேறாத ஆசைகளுக்கு இடையில் ஒரு சின்ன ஆறுதல்…!
சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்பது முன்பே தெரியும். ஆனால் இத்தனை விதிமுறைகளோடு பரோல் கிடைக்கும் என்பதை அவர் நினைக்கவில்லை. சென்னைக்கு வந்தால் தனது ஆதரவு அமைச்சர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். மிக முக்கியமான ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல நினைத்திருந்தார். இறந்து போன தன் சகோதரியும் குடும்பத்தினரை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதுவும் எதுவும் நடக்காதபடி பார்த்துக் கொண்டார்கள் ஒபிஎஸ்-இபிஎஸ் அணியினர்.
தங்கியிருக்கும் வீடு மருத்துவமனை தவிற வேறு எங்கும் செல்லக் கூடாது எவரையும் சந்திக்கக் கூடாது என்று இவர்கள் அழுத்தம் கொடுத்து விதித்த நிபந்தனை சசிகலாவை மட்டுமல்ல அவரை சந்திக்க விரும்பியவர்களையும் முடக்கி விட்டது. அந்த கவலயைத்தான் செல்லூர் ராஜு ஊடகங்களிடம் வெளிப்படுத்தினார்.
எங்கும் செல்ல முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சிலர் மறைமுகமாக சசிகலாவிடம் பேசியிருக்கிறார்கள். அவர் செல்லும் இடமெல்லாம் அவரது ஆதரவாளர்கள் கூடி வாழ்த்துக் கோஷமிட ஜெயலலிதா தோரணையில்தான் வந்து சென்றிருக்கிறார் சசிகலா.
சசிகலா சிறையில் இருந்து வரும் போது மிக மோசமான கண்டிஷனில் இருந்து நடராஜனின் உடல் நிலை முன்னேறி விட்டது. அவருக்கு பொறுத்தப்பட்ட உடல் உறுப்புகள் பொருந்தி அவைகள் வேலையும் செய்யத் துவங்கி விட்ட நிலையில் இன்னும் சில மாதங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தாக வேண்டிய சூழல் உள்ளது.தன் கணவரின் உடல் நிலை தொடர்பான ஒரு சின்ன ஆறுதல் இருந்தாலும், கட்டுப்பாடுகள் போட்டு தன்னை முடக்கிய கவலையில் தினகரனுக்கு சில எச்சரிக்கைகளையும் கொடுத்திருக்கிறார்.
எதிர் அணியில் உள்ளவர்களில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், ஜெயக்குமாரை தவிற மற்றவர்களை கடுஞ்சொற்களால் விமர்சிக்க வேண்டாம் என்றிருக்கிறார். அது போல ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாராணை ஆணையத்தில் இருந்து அழைப்பு வரும் பட்சத்தில் அப்பல்லோ நிர்வாகம் தங்களுக்கு அளித்த விடியோ ஆதாரங்களையும், எய்ம்ஸ் மருத்துவர்களின் மருத்துவக் குறிப்புகளையும் தயார் செய்து வைக்குமாறு கூறியிருக்கிறார். ஜெயலலிதா விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது சசிகலாவைப் பொறுத்தவரை நிம்மதியான விஷயம். காரணம் இதில் தன்னை குற்றவாளியாக்க நினைக்கிறவர்களுக்கு இதுவே ஒரு பாடமாக அமையட்டும் என நினைக்கிறார்.

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*