நான் இந்து என்பதால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்:நயன்தாரா சாஹல்

Picture Courtesy : Al-Jazeera

தகுதி நீக்கம்: டெல்லியில் வெல்ல நினைக்கும் பன்னீர்…!

ஹரியானா : கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் #VIDEO

ஐந்து மூடை சிமெண்டில் அரசுப்பள்ளி:எடப்பாடி அரசின் ஊழல் சாதனை…VIDEO…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

 

நான் ஏன் இந்துத்துவாவை எதிர்க்கிறேன் என தெரிந்த ஒருவர் கேட்டார். ஏனென்று நான் அவரிடம் சொன்னேன். நான் இரண்டு காரணங்களுக்காக இந்துத்துவாவை எதிர்க்கிறேன். தனிப்பட்ட காரணம் ஒன்றும், அரசியல் காரணம் ஒன்று.

தனிப்பட்ட காரணத்தில் இருந்து தொடங்குகிறேன்.நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால், நான் இந்துவாகவே பிறந்தேன் எனச் சொல்லவில்லை,  எனக்கு மத நம்பிக்கை இருக்கிறது எனச் சொல்கிறேன். என்னுடைய மதம் எனக்கு முக்கியம். நான் ஒவ்வொரு நாளுக்கான சக்தியையும்,ஆற்றலையும் அதில் இருந்து தான் பெற்றுக் கொள்கிறேன். உலகம் நம்முடைய குடும்பம் என பயிற்றுவிக்கிறது சனாதன் தர்மம். என் வாழ்க்கை மற்றும் எண்ணங்களுக்கும், பிற மதத்தை பயில்கிறவர்களிடம் நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதற்கும் மையமாக இருப்பது என் மதம் தான். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, அவர்கள் என்ன மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மதம் முக்கியமானது. உண்மையில் ஆன்மீகத்தை அறிந்தவர்கள் கடவுள் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் அறிந்திருப்பார்கள். படைத்தவரின் பார்வையில் அத்தனை பேரும் சமமானவர்கள் தான்.

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

 

இதனால், என் மதம் ,எப்படி இருக்கக் கூடாதோ அப்படி சிலரால் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இவர்கள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொண்டு தங்களுக்கே சொந்தமான  வன்முறையான மத கோட்பாட்டை பின்பற்றுவதனால் அப்பாவி இந்தியர்களை கொலை செய்கிறார்கள், அவர்களுடைய மதத்தை கேள்வி கேட்பவர்களுக்குள் தோட்டாக்களை இறக்குகிறார்கள், கத்திகளோடு ஒரு ட்ரெயினுக்குள் ஏறி தில்லியில் ஈத் பெருவிழாவிற்காக பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய பதினைந்து வயது சிறுவனை குத்தி கொலை செய்கிறார்கள். இந்த வன்மம், பாதிக்கப்பட்டவர்களின் கல்லறைகளையும் துளைத்து பின் தொடர்கிறது. துயரில் மூழ்கியிருக்கும் மொஹமது அக்லக் மற்றும் பெஹ்லு கானின் குடும்பத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டு, அவர்களை கொன்றவர்கள் சுதந்திரமாக வெளியே வேறு குற்றங்கள் செய்து கொண்டிருப்பதை வேறெப்படி புரிந்து கொள்வது?

சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து, “ பிதாவே, இவர்களை மன்னியும்,தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்” என்றார். ஆனால், இதே போன்றதொரு ஜெபத்தை இந்துக்களால் சொல்ல முடியாது. ஏனென்றால், இந்து மதத்தின் பெயரால் பலரை காயமாக்கி, கொலை செய்து,பீதியூட்டும் அவர்களுக்கு தாங்கள் செய்வது இன்னதென்று தெரியும், அதில் அவர்களுக்கு பெருமையும் உண்டு. மதவாத, இனவாத வெறித்தனம் தடுக்கப்படாத நிலையில்,ஆளும் சித்தாந்தம் வெறித்தனத்திற்கு இலவசமாக இடமளிக்கும் போது , இது போன்ற சம்பவங்கள் பல நாடுகளில்,பல நூற்றாண்டுகளில் நடந்தேறியிருக்கிறது.

பிறகு, அரசியல் காரணம். இந்தியாவை ஒரு இந்து நாடாக அறிவிக்க வேண்டி,அரசியல் காரணங்களுக்காக இந்து மதத்தை மறு வரையுறை செய்யும் அரசியல் கண்டுபிடிப்பு தான் இந்துத்துவா. இந்த நாடு இந்துக்களுக்கானது, பிற இந்தியர்கள் ஊடுருவி,படையெடுத்து வந்தவர்கள் அல்லது வெளியாட்கள் என்கிறது இந்துத்துவா. வரலாற்று ரீதியாகவே,இது தவறானது. பிற நிலப்பரப்புகளையும் அதில் தோன்றியிருக்கும் நாகரீகங்களையும் போலவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த குடியேற்றங்களின் விளைவு தான் நாம் இன்று வாழும் இந்தியா.

பூமியில் “சுத்தமான” இனம் என ஒன்று இல்லவே இல்லை. நம்மை உருவாக்க வேண்டி ஒன்றான அத்தனை இனங்களின் கலவை தான் நாம். இந்த நிலத்தில் முதலில் தோன்றிய பூர்வகுடி மக்கள் எந்த அளவு இந்தியர்களோ, அதே அளவு இந்தியர்கள் தான் படையெடுத்து வந்தவர்களும், வெளியாட்களும்.  முதலில் வந்தது முட்டையா? கோழியா என்பது அவசியமில்லை. வித்தியாசமான மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகளை சேர்ந்த மக்கள் நாம் இன்று இந்தியாவின் மீது உரிமை கொண்ட குடிமக்களாக இருக்கிறோம்.

‘அம்மா இட்லி’: வதந்தி பரப்பிய அதிமுகவினரை யார் கைது செய்வது?

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தினகரன் கைது செய்யப்படலாம்?

இந்த யதார்த்தத்தை இந்துத்துவாவால் ஜீரணிக்க முடியாது. இந்துத்துவாவை ஆதரிப்பதாக சொல்பவர்கள் இந்த உண்மையை இரண்டு வகையில் கையாள்கிறார்கள் : ஒன்று, தங்கள் கோட்பாட்டிற்குள் வராதவர் அல்லது வெளி ஆள் என தாங்கள் நினைப்பவரை அழிக்கும் இராணுவத் தீர்வு.  கடவுள் ஒருவரே அவரை நாம் பல பெயர்கள் சொல்லி அழைக்கிறோம் என ‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்; சப் கோ சம்மதி தே பகவான்’ என்ற மந்திரத்தை நமக்கு தந்த மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதில் இருந்து இது தொடங்கியது. தற்காலத்தில் வேற்றுமைக்கும்,கருத்து வேறுபாட்டிற்கும், விவாதத்திற்கும் நிகழும் அநீதியின் முன்னோடியாக 1948ல் நடந்த காந்தியின் கொலையை இப்போது பார்க்க முடிகிறது.

இரண்டாவது, அச்சடிக்கப்பட்ட காகிதங்களை இதே முறையில் அழிப்பது. அச்சில் இருக்கும் வரலாற்றை அழித்து, அந்த இடத்தில் இந்துத்துவா வரலாறு ஒன்றை புனைந்து எழுதி வைப்பது. அக்பர் மேன்மயானவர் அல்ல, மஹாராணா பிரதாப் சிங் தான் ஹல்திகாதி போரை வென்றார் என நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது, சில இந்துத்துவா-ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பாட புத்தகங்களில் இருந்து மொகலாய ஆட்சியையே அகற்ற முடிவு செய்திருக்கிறார்கள்.

ஒருவேளை இந்த புத்தகங்களில் இவர்களில் ஆயிரம் ஆண்டுகள் பின்னே சென்று அத்தனை இஸ்லாமிய படையெடுப்புகளை அழிப்பார்கள். ஏனெனில், இந்தியாவின் உண்மையான வரலாறான இந்து வரலாற்றுக்கு இந்த படையெடுப்புகளும் அதன் வெற்றிகளும் இடையூறாக,அர்த்தமற்றதாக இருப்பதாக இந்துத்துவா சொல்கிறது.

நம் அனைவரையும் ஒன்று போல சிந்திக்கச் செய்யும் ஒரு இனமாக மாற்ற நினைக்கும் இந்த  ‘மனக்கட்டுப்பாட்டு(Mind-Control)’ புராஜெக்டிற்காக நினைவுகளை எல்லாம் அழித்தொழிக்க இந்த பிரச்சாரம் தேவையாக இருக்கிறது. காந்தியின் அஹிம்சை கொள்கை இந்தியர்களை பலவீனமாக்கியது என அதை இழிவுபடுத்தியது இந்த பிரச்சாரம் தான். இரக்க உணர்வு எல்லாம் நோஞ்சான்களுடையது என கருணையை மறுப்பதும் இந்த பிரச்சாரம் தான். மனித மனதின் மிக நாகரீகமான சாதனையாக ‘கருணை’ இருக்கிறது; ஒரு பேரரசின் இராணுவப்படையை ஆயுதம் எதுவும் இல்லாத இந்தியர்கள் சந்தித்தை விட பெரிய துணிச்சலான மோதல் எங்கும் நிகழவில்லை;இருந்தாலும்,எப்படி இவர்களால் இந்த முடிவை எடுக்க முடிகிறது?

பெர்ட்டிரெண்ட் ரசெல் அரசியலை ‘இளிக்கும் பிசாசு’ என்று சொன்னார். இன்று இந்துத்துவா ஆட்சியின் கீழ் அரசியல் அப்படித்தான் ஆகியிருப்பதாக தெரிகிறது. பல மதங்களை,பல கலாச்சாரங்களை கொண்ட நம்முடைய பராம்பரியத்தின் பெரும் பகுதிகள் அவமரியாதை செய்யப்படுகிறது, துண்டிக்கப்படுகிறது. நாம் ஒற்றைக் கலாச்சாரமுறைக்குள் சுருக்கப்படுகிறோம். அந்த கலாச்சாரம் இந்துமதமாக இருப்பது மட்டுமல்லாமல், இந்தியா எதற்காகவெல்லாம் உழைத்ததோ, எதற்காகவெல்லாம் பாடுபட்டதோ, எதையெல்லாம் பெருமையான சொத்தாக கட்டிக் காத்ததோ – அத்தனைக்கும் எதிரிடையாக இருக்கிறது. இந்தியா, உலகம் முழுவதுமே அதன் வேற்றுமையில் ஒற்றுமை குணத்திற்காகவே ரசிக்கப்படுகிறது,பாராட்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்வது இங்கே அவசியம்.

இதற்கு எதிர்மறையாக,அரசியல் அதன் தொடக்கத்தில் எப்படி இருந்தது என பார்ப்போம். மஹாத்மா காந்தி, தீவிரமாக ஆன்மீகத்தில் மூழ்கியிருந்தவர், பல பிரதேசங்களை, மதங்களை,சாதிகளை,மொழிகளை,பாலினங்களை கடந்து ஒரு தேசிய இயக்கத்தை தொடங்கிய போது நவீன இந்தியாவிற்கான அடிக்கல்லை நாட்டியவர், உலக வரலாற்றில் முதல் முறையாக, விடுதலைக்காக போராட அத்தனை வர்க்க மக்களையும் ஒரு கூரையின் கீழ் ஒன்று திரட்டினார். சட்டசபையில் இருந்தவர்கள் பெரும்பாலும் வயதான பழமைவாத இந்துக்கள் தான்.எனிலும், அவர்கள் விடுதலை பெற்ற போது தங்களுடைய மத அடையாளத்தை துறந்து இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்று அறிவித்தார்கள். இதற்கு காரணம், இந்தியா ஆழமாக மத நம்பிக்கை கொண்ட பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களை கொண்டிருந்தது தான். மதத்தை ஒரு தனிப்பட்ட காரியமாக மாற்றினார்கள். ஒவ்வொரு பிரஜைக்கும் அவன்/அவள் தேர்ந்தெடுக்கும் மதத்தை வழிபடும் உரிமையை கொடுக்க அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளிக்கும்படி மாற்றினார்கள்.

பல்வேறு மதங்களை பின்பற்றிய இதே கோடிக்கணக்கான ஆன்மீகவாதிகளின் குடியரசு தான், ஒரு இறை-மறுப்பாளரை, யதார்த்தவாதியை திரும்ப திரும்ப பிரதமராக்கியது. அவர் தனிப்பட்ட முறையில் யதார்த்தவாதியாக இருந்தாலும் தன் நாட்டு மக்களின் மத நம்பிக்கைகளை மதித்தார்,ஒவ்வொரு மனிதரும் தான் தேர்ந்தெடுக்கும் மதத்தை வழிபடும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என தீர்மானித்தார்.எழுபது வருடங்களுக்கு முன்னர் இந்தியா தேசமாக வளரத் தொடங்கிய காலம் அது.  இந்துத்துவா அரசியல் இந்தியர்களை இரண்டாவது முறையாக ‘இந்துக்கள்’ மற்றும் ‘பிறர்’ என பிரிப்பதற்கு முன்னர் வரை அப்படியே தான் இருந்தது.

ஒரு உலகம், ராணுவ தேசியவாதத்தை நோக்கியும், அடையாளங்கள் சுருக்கப்பட்டு சிறு அறைக்குள் அடைக்கப்படுவதை நோக்கியும்,நம்மவர்கள் என கருதப்படும் சிலர் மட்டும்  தவிர்க்கப்படுவதை நோக்கியும்,உண்மைகள் மறுக்கப்பட்டு புனைவால் ஆளப்படும் ஒரு சகாப்தத்தை நோக்கியும் நகர்கிறது என்பதை அறிவது பெரிய ஆறுதலாக இருப்பதில்லை. கடின உழைப்பால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் பாரம்பரியமாக கொண்ட நாம் இந்த போக்கில் இருந்து விதிவிலக்கானவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

கட்டுரையாளர் நயன்தாரா சாஹல்

கட்டுரையாளர் குறிப்பு – பிரபல எழுத்தாளரான நயன்தாரா சாஹல், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தங்கை விஜயலஷ்மி பண்டிட்டின் மகள். பிரதமர் நரேந்திர மோடியின் இந்துத்துவா அரசியலின் விளைவாக தாத்ரியில் மொஹமது அக்லக், பேராசிரியர்கள் கல்புர்கி,நரேந்திர தாபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்டதனால், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் சாகித்ய அகாடெமி விருதை திருப்பிக் கொடுத்தவர். ஆங்கிலத்தில் எழுதுபவர்.

மொழியாக்கம் – ஸ்னேகா

(இந்த கட்டுரை ஆங்கிலத்தில் தி வயர் தளத்தில் தோன்றியிருக்கிறது)

முக்கிய செய்திகள்

இலைக்கு இது போதாத காலம்…!

‘குட்கா ஊழல்’ ஆவணங்களை திருடியது யார்?

மகள் ஆருஷி கொலை: பெற்றோர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்…!

“எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்ல” சிரித்து மழுப்பிய பன்னீர்…!

சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் பாஜக தலைவர்கள்!

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*