புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

]’ஜெ’ வுக்கு பிடித்த பச்சை வெளியே:மோடியின் ‘காவி’ உள்ளே:மவுனமாக ஆமோதித்த பன்னீர்…!

நான் இந்து என்பதவால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்:நயன்தாரா சாஹல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதிமுகவின் ஸ்டெஃப்னி முதல்வர் பன்னீர்செல்வத்தை அனைவருமே மிக்சர் என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் மிக்சர் சாப்பிட்டு விட்டு எழுந்து செல்லும் அளவுக்கு அவர் ஒன்றும் அப்பாவி அல்ல. அதிமுக எனும் கட்சியையே பாஜகவுக்குள் ஐக்கியமாக்கி மக்கள் செல்வாக்கு மிக்க அந்தக் கட்சியை டெல்லிக்கு அடகு வைக்கும் பாஜக விரும்பும் பன்னீராக மாறியிருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவின் எது நடந்தாலும் அது தன் விருப்பத்திற்கு நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.அது நடக்காமல் போகும் போது தியானத்தை துவங்கி விடுகிறார்.
பாஜக அறிவுரையில் இரு அணிகளும் இணைந்த பின்னர் அங்கும் திருப்தியின்மை நிலவுகிறது என்பதை நாம் முன்கூட்டியே எழுதியிருந்தோம். ஆட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துக் கொள்ளட்டும். ஆனால் கட்சியை தனக்கு கொடுத்து விட வேண்டும் என்பதுதான் பன்னீரின் விருப்பம். அந்த விருப்பங்கள் நிறைவேறும் என்ற வாக்குறுதிகளை பெற்று விட்டுதான் இணைந்தார். ஆனால் துணை முதல்வருக்கான முக்கியத்துவமும் இல்லை. கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் இல்லை எனும் நிலையில் தான் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்தார். அது தமிழகத்தின் நலத்திட்டங்கள் தொடர்பான சந்திப்பு என்று சொன்னாலும், அதை நம்புவதற்கில்லை காரணம் தமிழக அரசின் கோரிக்கை தொடர்பான துரைசார் அமைச்சர்கள் எவரும் அவரோடு செல்லவில்லை.

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!
எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியையும் அவர் நம்பிக்கைக்குரியவர் அல்ல என்றும் புகார் சொல்லவுமே மோடியை சந்தித்தார் பன்ன்னீர் “தமிழகத்தில் நடக்கும் அத்தனை விவகாரங்களையும் நானறிவேன். நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் கவலைப்படாமல் போய் வாருங்கள்” என்றார்.
மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாகத்தான் மோடியை பன்னீர்செல்வம் சந்தித்தார் என்றால். நீட், காவிரி, நெடுவாசல், கெய்ல் என தமிழகத்தை அச்சுறுத்தும் எந்த பிரச்சனையை அதன் ஆஸ்தான குரு மோடியிடம் பேசி சரி செய்து கொடுப்பார் பன்னீர்செல்வம்.
அதிமுக என்றாலே அது ஜெயலலிதாதான். அத்தனை பேரும் அவரை சந்திக்க சென்னைக்கு வந்தார்கள். மரணிக்கும் வரை இதுதான் வரலாறு. இப்போது மாதத்திற்கு ஒரு முறை ஒபிஎஸ்-இபிஎஸ் இருவருமே டெல்லிக்கு ஓடுகிறார்கள் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்ட..இதோ பன்னீர் சென்று வந்து விட்டார் இபிஎஸ் விரைவில் செல்வார்.

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

 

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*