புதுச்சேரியில் விவசாயிகள் மீது தடியடி பதட்டம்…!

’ஜெ’ வுக்கு பிடித்த பச்சை வெளியே:மோடியின் ‘காவி’ உள்ளே:மவுனமாக ஆமோதித்த பன்னீர்…!

நான் இந்து என்பதவால் இந்துத்துவாவை எதிர்க்கிறேன்:நயன்தாரா சாஹல்

‘நிலுவையில் உள்ள தொகையை வழங்கக் கோரி போராடிய விவசாயிகள் மீது புதுச்சேரி போலிசார் தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுசேரியை அடுத்த லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுமார் 450 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள். தமிழகம் புதுச்சேரியைச் சேர்ந்த 18,000 விவசாயிகள் இதில் உறுப்பினராக உள்ளார்கள். ஆலை நடத்தில் இயங்குவதாக கூறி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 10 கோடி ரூபாய் அளவிலான தொகையை வழங்காமல் நிலுவைத் தொகையாக வைத்துள்ளது நிர்வாகம்,
அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், ஊதியத்தை உடனே கொடுக்கக் கோரியும் கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் போராடிய நிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும் என்.ஆர்.காங்கிரஸின் எம்.எல்.ஏ டி.பி.ஆர் செல்வம் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சர்க்கரை ஆலையை முற்றுகையிட முயற்சிசெய்தனர். போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் முற்றியதால் போலீசார் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
எம்.எல்.ஏ வின் சட்டை கிழிக்கப்பட்டதாலும் 10 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்ததாலும் அங்கு பதட்டம் நிலவுகிறது. போலீஸ் தடியடியை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

ஏன் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆருஷியின் பெற்றோர்?

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

முடிந்தது பரோல்:தினகரனை எச்சரித்து விட்டு கிளம்பிய சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*