13 வயதில் தாய்:சிறுமிக்கு நடந்த கொடுமை…!

Silhouette

தகுதி நீக்கம்: டெல்லியில் வெல்ல நினைக்கும் பன்னீர்…!

ஹரியானா : கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் #VIDEO

ஐந்து மூடை சிமெண்டில் அரசுப்பள்ளி:எடப்பாடி அரசின் ஊழல் சாதனை…VIDEO…!

தூக்கமில்லையா? அவசியம் பாருங்கள்…!#video

தலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 13 வயது சிறுமி , தன் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளியில் இருந்து வெளியேறிய செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது.

மஹாராஷ்ராவின் பன்வெல் நகரின் அருகே இருக்கும் பெர்லா கிராமத்தை சேர்ந்த பழங்குடி இந்த சிறுமி, 55 வயது நபர் ஒருவரால் பல முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறார். யாரிடமாவது இதைப் பற்றிச் சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்நபர் மிரட்டவே, சிறுமி யாரிடமும் அதைப் பற்றி சொல்லவில்லை.

அவள் ஆறு மாதங்களாக கருவுற்றிருப்பதாக மருத்துவர்கள் சொன்னதற்கு பிறகு, அவள் பள்ளிக்கு செல்லவில்லை. “ அவள் கர்ப்பமாக இருந்தது பற்றி கிராமத்தில் எல்லோருக்கும் தெரியும், யாரும் இவளை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்.ஏன் இத்தனை நாளாக இவள் ஸ்கூலுக்கு போகவில்லை என்பதும் பள்ளியில் எல்லோருக்கும் தெரியும்” என சிறுமியின் அப்பா சொல்லியிருக்கிறார்.

கடந்த வாரம் அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தை வெறும் 1.2 கிலோ மட்டுமே இருப்பதால் ஜேஜே மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தையை தத்து கொடுத்து விடுங்கள் என மருத்துவர்கள் அறிவுறுத்திய போதும், குழந்தையை தாங்களே வளர்ப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அந்த சிறுமியின் பெற்றோர்கள்.  “ என் பெண்ணை யாருமே திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், கடைசி காலத்தில் இந்த பிள்ளையாவது பார்த்துக் கொள்ளும்” என்று சொல்கிறார் அந்த சிறுமியின் அம்மா.

இதை வாசிச்சீங்களா? மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லை

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*