சினிமாவுக்கு சிக்கல்:நடிகர்கள் சம்பளத்தை குறைப்பார்களா?#VIDEO

#NoBraDay – ஏன்? எதற்கு ? எப்படி?

தமிழ் சினிமாவில் அனைத்து பிரச்சனைகளையும் பேசுகிறார்கள். ஒன்றே ஒன்றை தவிற. அது பெரிய நடிகர்களின் ஊதியத்தை குறைத்துக் கொள்வது பற்றிதான். திரையரங்குகளில் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க தயாரா என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பும் என்று கூறப்படுகிறது.

விஷால் விடுத்த கோரிக்கையில், “திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். மல்டிப்ளக்ஸ் மால்களில் உள்ள திரையரங்கில், நேரத்துக்கு ஏற்ப பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசாங்கம் நிர்ணயித்த பார்க்கிங் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதேபோல் அம்மா குடிநீர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தண்ணீர் எடுத்துவர ரசிகர்களுக்கு அனுமதி தேவை, விலை அச்சிடப்பட்ட பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சரிதான், நம் தமிழ் சினிமா வளர்ச்சி அடைய அடைய அதன் கதாநாயகர்களின் பொருளாதார வளர்ச்சியும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு உயர்ந்திருக்கிறது. இவர்களது சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என இதுவே கோடிக்கணக்கில் இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் பாதி பட்ஜெட் நம் முன்னணி கதாநாயகர்களின் சம்பளத்துக்கே சரியாகிவிடும். ஆசிய கண்டத்தில் ஜாக்கிசானுக்கு பிறகு அதிக சம்பளம் பெறுபவர் நம் தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த், அவரது சம்பளம் மட்டும் 50-60 கோடி. அதேபோல் கமல்ஹாசனின் சம்பளம் மட்டும் 25-30 கோடி, அதுபோக அவர் எழுதி இயக்கும் படங்களில் வரும் லாபத்தில் பங்கு உண்டு. கமல்ஹாசன் சம்பளத்துக்கு நெருங்கிய தொகையையே விஜய் மற்றும் அஜித் ஆகியோரும் பெறுகின்றனர். தற்போது இவர்கள் எல்லோருமே லாபத்தில் பங்கு வாங்கிக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சம்பளத்தை குறைத்து நடிக்கும் பட்சத்தில் திரைப்படத்தை விற்கும் விலை குறைவாக வாய்ப்புள்ளது.

தமிழ் சினிமா எளிய மக்களுக்கு எட்ட முடியாத உயரத்தில் இருக்க மிக முக்கிய காரணம் கோடி கோடியாய் பெரிய நடிகர்கள் வாங்கும் ஊதியமே. அவர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் கொள்ளை லாபம் பார்த்து விட்டு மீதியை ரசிகர்களின் பாக்கெட்டுகளில் இருந்து எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய அரசு ஜி.எஸ்.டியை குறைக்க வேண்டும், மாநில அரசு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் எவரும் நடிகர்கள் ஊதியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுவதில்லை.
தமிழ் சினிமாவின் தலைவிதி, பெரிய நடிகர்கள் வாங்கும் ஊதியத்தில்தான் இருக்கிறது. அதை குறைத்தால் பலருக்கும் குறைந்த லாபம் வரும். ஆனால் அது பலரையும் வாழ வைக்கும் செய்வீர்களா ஸ்டார்களே…!

புகார் மனு:பன்னீரை அடுத்து மோடியை சந்திக்க இபிஎஸ் திட்டம்…!

’ஜெ’ வுக்கு பிடித்த பச்சை வெளியே:மோடியின் ‘காவி’ உள்ளே:மவுனமாக ஆமோதித்த பன்னீர்…!

பன்னீர்செல்வம் கோஷ்டி மோடியுடன் அவசர சந்திப்பு பின்னணி…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*